நாளங்களை அறுத்து ரத்தத்தை உறிஞ்சும்..எடப்பாடி பழனிசாமிக்கு வந்ததே கோபம்! கொந்தளிப்பு ட்விட்டர் பதிவு
சென்னை : ஏழை எளிய நடுத்தர மக்களின் நாளங்களை அறுத்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் மின்கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு எடுத்த நிலையில், பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என வலியுறுத்தியிருந்தனர்.
எனினும், தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தது. அதன்படி, புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மின் கட்டண உயர்வு
எனினும், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடரும் என்றும், வரும் 2027-ம் ஆண்டு வரை இந்த கட்டண உயர்வு அமலில் இருக்கும் என்றும் தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.இதன்மூலம் தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு வரும் மின் கட்டணம், கணிசமாக உயர உள்ளது.

கடும் எதிர்ப்பு
தமிழக அரசின் இந்த மின்கட்டண உயர்வுக்கு, பொதுமக்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏழை - எளிய மக்களை பாதிக்கும் மின்கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஆண்டுக்காண்டு மின் கட்டண உயர்வு இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில் ஏழை எளிய நடுத்தர மக்களின் நாளங்களை அறுத்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் மின்கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்," ஏழை எளிய நடுத்தர மக்களின் நாளங்களை அறுத்து அவர்களின் ரத்தத்தை உறிஞ்சும் மின்கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது.

திரும்ப பெற வேண்டும்
மக்களை வஞ்சித்து அவர்கள் தலையில் மின்னல் இடியாய் விழுந்திருக்கும் அளவு உயர்ந்திருப்பது மின் கட்டணமா? தங்களின் நிர்வாக திறமையின்மை கட்டணமா? இந்த விடியா அரசு மக்களின் மீது ஏற்றியுள்ள பெருஞ்சுமையான மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை அதிமுகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications