E(O)PS means End of Paneer Selvam.. ஓபிஎஸ்ஸுக்கு எதிராக களமிறங்கிய அதிமுக ஐடி விங்!
சென்னை: மரியாதையாக வழி அனுப்பி வைக்கிறோம், நீங்களாக சென்றுவிடுங்கள் என ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அதிமுகவின் ஐடி பிரிவினர் களமிறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக் குழு கூட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக கூடியது. இதுவரை இல்லாத அளவுக்கு கலாட்டாக்களும் கேலி கூத்துகளும், சங்கடங்களும் காணப்பட்டன.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை, அதுவும் எடப்பாடி பழனிச்சாமிதான் தேவை என தொண்டர்கள் முழக்கமிடுகிறார்கள். ஓபிஎஸ்ஸை காட்டிலும் எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் அதிக ஆதரவு உள்ளது.

23 தீர்மானங்கள்
பொதுக் குழுவில் தான் கையெழுத்திட்டிருந்த 23 தீர்மானங்களை தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் முறையிட்டதால் அதன்படியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நேற்றைய தினம் ஒற்றைத் தலைமை குறித்த எந்த தீர்மானங்களும் நிறைவேற்றவில்லை.

பொதுக் குழு நிராகரிப்பு
இதனால் 23 தீர்மானங்களை பொதுக் குழு நிராகரிக்கிறது என சிவி சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர். இந்த நிலையில் ஓபிஎஸ்ஸின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் காலாவதியாகிவிட்டதாக சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த இருதினங்களாக ஓபிஎஸ்ஸுக்கு எதிராக அதிமுகவின் ஐடி விங் களமிறங்கியுள்ளது.

கோவை சத்யன்
இதுகுறித்து ஐடி விங்கை சேர்ந்த கோவை சத்யன் கூறுகையில் கடந்த 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமியா ஓ பன்னீர் செல்வமா என போட்டியிருந்தது. அது போல் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எடப்பாடி பழனிச்சாமியும் ஓபிஎஸ்ஸும் இணைந்தனர்.

ராஜ சத்யன் ட்வீட்
2022 ஆம் ஆண்டு ஓபிஎஸ்ஸுக்கு இபிஎஸ் முடிவு கட்டிவிட்டார், எனவே ஓபிஎஸ்ஸை மரியாதையாக வழி அனுப்பி வைக்கிறோம். சென்றுவிடுங்கள் என ட்வீட் போட்டுள்ளார. அதுபோல் அதிமுகவின் மதுரை மண்டல ஐடி விங் பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் தனது ட்விட்டர் பக்கத்தில் தேதிகள் மாறலாம், தலைமை மாறாது. தலைமையை தேர்ந்தெடுப்பது, தொண்டர்களும்,மக்கள் மன்றமும் மட்டுமே...
#கழக_பொதுச்செயலாளர்_எடப்பாடியார் என தெரிவித்துள்ளார்.

பழனிச்சாமிக்கு ஆதரவாக
அது போல் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள ட்விட்டர், முகநூல் பக்கங்களில் அதிமுக வரலாற்றில், பொதுக்குழு கூட்டத்தில் இப்படி அவமானப்பட்டு வெளியேறும் நபரை இது வரை யாரும் கண்டதில்லை. முன்னாள் முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் இன்று சொந்த கட்சி பொதுக்குழு நபர்களால் துரோகி என்றும் கட்சியை விட்டு வெளியேறுங்கள் என்றும் கோஷம் போட்டு வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஓபிஎஸ் இத்தனை எதிர்ப்புகளை எப்படி சமாளிக்க போகிறார் என்பது குறித்து தெரியவில்லை.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications