நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. இபிஎஸ் - ஓபிஎஸ் அதிரடி ஆலோசனை.. பரபரத்த அதிமுக கூட்டம்!
Recommended Video
சென்னை: உள்ளாட்சி தேர்தலில் 95% இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி அதிமுக கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக தீவிரமாக கட்சியினர் களமிறங்கி உள்ளனர்.
இதற்காக அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை நடந்தது. இடைத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

ஆலோசனை கூட்டம்
இந்த ஆலோசனை கூட்டம் 1 மணி நேரம் நடந்தது. இதில் முழுக்க முழுக்க உள்ளாட்சி தேர்தல் குறித்து மட்டுமே ஆலோசனை செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது, யாருக்கு இடம் கொடுப்பது என்பது தொடர்பாக இதில் ஆலோசனை நடந்தது.

3 ஆண்டு
3 ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடக்கிறது. அதனால் அதிமுக இதில் வெற்றிபெறுவதற்காக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. அதிமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடங்கள் கொடுப்பது, மேயர் இடங்களை எப்படி கொடுப்பது என்றும் ஆலோசனை செய்தார்.

முதல்வர் பழனிசாமி
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, நாங்குநேரி, விக்கிரவாண்டியில் எப்படி வென்றோமோ இப்படியே வெல்ல வேண்டும்.திட்டிட்டு வெற்றியை குவிக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் 95 வெற்றியை நாம் பெற வேண்டும்.

தீவிர உழைப்பு
அதற்காக நாம் இப்போதே தீவிரமாக உழைக்க வேண்டும். நல்ல வேட்பாளர்களை நிறுத்தினால் கண்டிப்பாக வெற்றிபெற முடியும். மாவட்ட செயலாளர்கள் கையில்தான் நம்முடைய வெற்றி இருக்கிறது. அவர்கள்தான் வேட்பாளர்களை தேர்வு செய்ய போகிறார்கள், என்று கூறி உள்ளார்.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
ரிவென்ஞ்ச் டைம்.. எடப்பாடி மாஸ்டர் பிளான்.. எஸ்.பி.வேலுமணி அப்செட்.. அதிமுகவில் மீண்டும் தர்மயுத்தம் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications