அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்கப்பட்டது செல்லுமா? சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்ற சபாநாயகரின் முடிவுக்கு எதிராக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. சத்தியபாமா, மரகதம் குமரவேல் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் ராஜினாமாவை ஏற்றதற்கு எதிரான வழக்கு என்பதால், நாளை அளிக்கப்பட உள்ள தீர்ப்பு அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை பொதுத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைந்தது. திமுக 59 இடங்களிலும், அதிமுக 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

AIADMK MLAs resignations Case Madras High Court to deliver verdict tomorrow

அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதால் அக்கட்சிக்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு எழுந்தது. விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவை மீறி அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தனர். அவர்களுக்கு எதிராக தகுதி நீக்க புகாரை அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி அளித்தார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மரகதம் குமரவேல், சத்தியபாமா, எம்.ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 பேர் ராஜிமானா செய்த கையோடு தவெகவிலும் இணைந்தனர். தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது தவறு என்று சென்னை ஐகோர்ட்டில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்னமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளை சென்னை ஐகோர்ட் தீர்ப்பளிக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி ஜி அருள்முருகன் அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது. முன்னதாக கடந்த 9 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+