அவைத் தலைவரின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்பாதீர்- அதிமுக ட்வீட்!
சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கழகத் தலைமை ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன் அக்கட்சியின் அவைத் தலைவராக இருந்து வருகிறார். எம்ஜிஆர் காலத்திலிருந்தே கட்சியில் இருந்து வரும் மதுசூதனன், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்த போது ஓபிஎஸ்ஸுக்கு முதலில் வந்து ஆதரவு தெரிவித்தவர்.

இவருக்கு சில ஆண்டுகளாகவே அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் நேற்று இரவு பரவின. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து அதிமுக விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கழக அவைதலைவர் திரு. மதுசூதனன் அவர்களின் உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்,
தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் என தெரிவித்துள்ளது.
எனவே மதுசூதனனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடம் என்பதை யாரும் நம்ப வேண்டாம் என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications