"ஏகப்பட்ட EMIல நாடே கெடக்கு!" தெறிக்க விடும் அஜித்தின் துணிவு பாடல் - துணிவோடு அரசியல் பேசிய வைசாக்
சென்னை: அஜித்குமார் நடித்து பொங்கலுக்கு வெளியாகும் துணிவு படத்தின் 2வது பாடலான காசேதான் கடவுளடா தற்போது வெளியாகி உள்ள நிலையில், அதில் நாடே கடனில் இருப்பதாக வரிகள் இடம்பெற்று இருக்கின்றன.
எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களில் நடித்த அஜித்குமார் அடுத்து அவர் இயக்கி இருக்கும் துணிவு திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இத்துடன் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாவதால் கடும் போட்டி நிலவி வருகிறது.

துணிவு திரைப்படம்
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து உள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன், ஆமிர் என பலரும் நடித்து இருக்கிறார்கள். இப்படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பு
அடுத்தடுத்து படத்தில் அஜித் இருக்கப்போகும் தோற்றமும் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற செய்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான சில்லா சில்லா வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. ஜிப்ரான் இசையில், இளம் ராப் பாடகரான வைசாக் எழுதிய பாடலை அனிருத் பாடி இருந்தார். அது வெளியாகி பட்டித் தொட்டி எங்கு ஹிட் அடித்தது.

காசேதான் கடவுளடா பாடல்
இந்த நிலையில் 2 வது பாடலான "காசேதான் கடவுளடா" பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன் அடிப்படையில் இன்று பாடல் வெளியானது. இந்த பாடலையும் வைசாக் எழுது பாடி இருக்கிறார். அவருடன் நடிகை மஞ்சு வாரியரும், இசையமைப்பாளர் ஜிப்ரானும் சேர்ந்து பாடி இருக்கிறார்கள்.

செம ஹிட்
இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. வைசாகின் துள்ளலான ராப் குரலில் இந்த பாடல் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்திட்டு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. பொதுவாக ராப் பாடல்களில் வரிகள் புரியாது என்ற நிலையை மாற்றி வைசாகின் இந்த பாடலில் வரிகள் தெளிவாக மக்களுக்கு புரியும் வகையில் அமைந்து உள்ளது.

நாட்டின் கடன் சுமையை பேசும் பாடல்
"பொறக்குற நொடியில வெரட்டுது காசு.. இருக்குற நிம்மதிய பண்ணுது இப்ப குளோஸ்" என்று தொடங்கும் அந்த பாடல் பணம், வங்கி குறித்து பல்வேறு உண்மைகளை பேசுகிறது. பாடலின் ஒரு இடத்தில் "சுவிஸ்ஸுல இருக்குது காந்திக்கும் கணக்கு.. ஏகப்பட்டி EMI ல நாடே கெடக்கு" என்று இந்தியாவின் கடன் சுமை பற்றி அந்த பாடல் வரிகள் இடம்பெற்று இருக்கின்றன.

கவனம் ஈர்க்கும் பாடல்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடும் இப்படத்தின், இதுபோன்ற பாடல் வரிகள் இடம்பெற்று உள்ளது கூடுதல் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. இளம் இசை கலைஞரான வைசாக், என் ராண்ட கொஞ்சும் கேளு, காக்கா கதை ஆகிய சுதந்திர பாடல்களை பாடியதன் மூலம் இணையத்தில் பிரபலமானவர்.

யார் இந்த வைசாக்?
பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையை கொண்ட வைசாக்கை இயக்குநர் எச்.வினோத்தும், இசையமைப்பாளர் ஜிப்ரானும் அழைத்து துணிவு படத்தில் வாய்ப்பளித்து உள்ளனர். இதன் மூலம் அவருக்கு முதல் சினிமா வாய்ப்பே அஜித் படமாக அமைந்து உள்ளது. தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய வைசாக் 2 பாடல்களை சிறப்பாக கொடுத்து உள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications