தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த அரசு.. கையோடு மாணவர்களுக்கு சொன்ன குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டில் நாளை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்டில் 2வது, 4வது சனிக்கிழமை பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட்டில் 2வது, 4வது சனிக்கிழமை பள்ளி வேலை நாள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை பள்ளிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 2024-2025ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் குறித்து கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. இதன்படி சனிக்கிழமையான ஜுன் 29ம் தேதி பள்ளி செயல்பட்டது. ஜுலை மாதம் 23 நாட்கள் பள்ளி செயல்பட்டது. ஜுலை 23ம் தேதி சனிக்கிமை அன்று பள்ளிகள் செயல்பட்டது. இதேபோல் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான 10, 24 ஆகிய தேதிகளில் பள்ளிகள் இயங்கும் என்றும் அத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 22 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதேபால் செப்டம்பர் மாதத்தில் 14, 21 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்றும், அக்டோபர் மாதம் 5, 19 தேதிகளில் வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்றும், நவம்பர் மாதத்தில் 9, 23 ஆகிய இரண்டு சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்றும். டிசம்பர் மாதத்தில் சனிக்கிழமையான 12, 21 ஆகிய தேதிகளில் பள்ளிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதேபோல் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா இரண்டு சனிக்கிழமை விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது
ஒட்டுமொத்தமாக 365 நாட்களில் 220 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் என்றும், அரசு விடுமுறை, வார விடுமுறை என்று மொத்தம் 145 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. வழக்கமாக 210 நாட்கள் பள்ளிகள் இயங்கும். ஆனால் இந்த முறை கூடுதலாக 10 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்து.அதோடு 2024-2025 ஆண்டில் மட்டும் 20 நாட்கள் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட்டில் 2வது, 4வது சனிக்கிழமை பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட்டில் 2வது, 4வது சனிக்கிழமை பள்ளி வேலை நாள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாளையும், ஆகஸ்ட் 24ம் தேதியும் பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனித்தனியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளனர். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2024-25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் ஆகஸ்ட் 2வது சனிக்கிழமை மற்றும் 4வது சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது இந்த பள்ளி வேலை நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது அனைத்து வகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இந்த சுற்றறிக்கை சென்னை மாநகராட்சி கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர், இடைநிலை மாவட்ட கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 10.08.2024 அன்று SMC மறுகட்டமைப்பு கூட்டம் நடத்திட தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் நாளை (ஆகஸ்ட் 10) நடைபெறவிருந்த முதலாம் இடைத்தேர்வு கால அட்டவணை மாற்றி அமைக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர். ஆகஸ்ட் 24ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆகஸ்ட் 25ம் தேதி ஞாயிறு, ஆகஸ்ட் 26 கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications