Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அது என்ன கக்கூஸ் ஆப்? சென்னையில் இனி கழிப்பறை தேடி அலைய வேண்டாம்.. ஈஸியா கண்டுபிடிக்கலாம்! சூப்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கழிப்பறைகளை கண்டுபிடிக்கும், அதற்கு ரேட்டிங் கொடுக்கும் செயலியான கக்கூஸ் ஆப் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

    Udhayanidhi Speech about Kiruthika Uthayanithi Toilet Festival 2022 | Oneindia Tamil

    கடந்த இரண்டு நாட்களாக சர்வதேச கழிப்பறை திருவிழா 2022 சென்னை மயிலாப்பூரில் நடத்தப்பட்டது. Recycle Bin, Cheer NGO போன்ற அமைப்புகள் மூலம் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது. அங்கு இருக்கும் பல்வேறு பள்ளிகளில் இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி, சென்னையில் இருக்கும் கழிப்பறை வசதிகள், பெண்கள் மாதவிடாய் நாட்களில் எப்படி சுகாதாரமாக இருப்பது, கழிப்பறைகளை எப்படி பராமரிப்பது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    கக்கூஸ் செயலி

    கக்கூஸ் செயலி

    இந்த நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், கக்கூஸ் ஆப் என்ற செயலியை வெளியிட்டார். கழிப்பறை திருவிழா - தீர்வுக்கான களம் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் வீடியோவை வெளியிட்டார். இந்த நிலையில்தான்.. இந்த கக்கூஸ் ஆப் எப்படி செயல்படும் என்ற கேள்வி சென்னை மக்கள் இடையே எழுந்துள்ளது. இந்த கக்கூஸ் ஆப் எப்படி இயங்கும்.. எந்த வகையில் மக்களுக்கு பயன்படும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    கக்கூஸ் ஆப் செயல்பாடு

    கக்கூஸ் ஆப் செயல்பாடு

    சென்னையில் எங்கு நல்ல கழிப்பறைகள் உள்ளன, எங்கு கழிப்பறைகள் சரியான நிலையில் இல்லை என்பதை இந்த கக்கூஸ் ஆப் மூலம் எளிதாக கண்டுபிடிக்க முடியும். உதாரணமாக நீங்கள் ஒரு மாலுக்கு செல்கிறீர்கள். அங்கு செல்லும் முன் அதற்குள் கழிப்பறை செயல்படும் வசதியில் இருக்கிறதா என்று இந்த கக்கூஸ் ஆப்பில் பார்க்க முடியும். அது மேப்பில் காட்டிவிடும்.. எப்படி கூகுள் மேப்பில் ஏடிஎம் காட்டுகிறது, எப்படி . அதில் 1 முதல் 5 ஸ்டார் வரை ரிவ்யூ இருக்கும்.

    கழிப்பறைகள்

    கழிப்பறைகள்

    5 ஸ்டார் இருக்கிறது என்றால் அது நல்ல நிலையில் இருக்கும் கழிப்பறை. சரி இப்போது நீங்கள் 5 ஸ்டார் உள்ள ஒரு கழிப்பறைக்கு செல்கிறீர்கள், ஆனால் அது சரியான நிலையில் இல்லை என்றால் நீங்களே அதற்கு ரிவ்யூ கொடுக்க முடியும். ஏன் அதில் புகாரும் அளிக்க முடியும். இதன் மூலம் அந்த கழிப்பறையின் ரேட்டிங் குறையும். அதை அந்த கழிப்பறையை நிர்வகிக்கும் அதிகாரிகள், ஊழியர்கள் சரி செய்ய முடியும். ஹோட்டல்கள் உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து டெலிவரி செய்வது போலத்தான் இதுவும்.

     நீங்களே கண்டுபிடிக்கலாம்

    நீங்களே கண்டுபிடிக்கலாம்

    உங்களுக்கு அருகே எங்கே கழிப்பறை உள்ளது என்றும் நீங்கள் கண்டுபிடிக்கலாம். அதெல்லாம் சரி இதில் எப்படி ஏற்கனவே கழிப்பறைகள் லிஸ்ட் இருக்கிறது என்றும் நீங்கள் கேட்பது கேட்கிறது. சென்னையில் பல்வேறு கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், மாநகராட்சி நிர்வாகிகள் ஆகியோரின் உதவியுடன் சென்னையில் உள்ள கழிப்பறைகள் லிஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. 150 பேருக்கும் மேற்பட்டோர் இதற்காக களப்பணிகளை செய்துள்ளனர்.

    எத்தனை கழிப்பறை

    எத்தனை கழிப்பறை

    அதில் மொத்தம் சென்னையில் 1497 கழிப்பறைகளை கண்டுபிடித்துள்ளனர். இதில் 806 கழிப்பறைகள் தனியார் இடங்களில்.. அதாவது மால், பெட்ரோல் பங்க், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் அமைந்து உள்ளன. இந்த கழிப்பறைகள் எல்லாம் இந்த செயலியில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு அருகே எந்த கழிப்பறை சுத்தமாக இருக்கும் என்று கண்டுபிடிக்க முடியும்.

    லிஸ்ட் எடுக்கப்பட்டது

    லிஸ்ட் எடுக்கப்பட்டது


    சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் உள்ள எல்லா கழிப்பறையும் இதில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை நேற்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதோடு இந்த செயலி மூலம் சென்னையில் கண்டறியப்பட்ட சுத்தமான கழிப்பறைகளை வைத்து சுகாதாரத்துறை ஆய்வாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆடியோ வசதிகள் இருப்பதால் கண்பார்வையற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

    பெண்களுக்கு உதவி

    பெண்களுக்கு உதவி

    அதேபோல் பெண்கள் எளிதாக சுத்தமான கழிப்பறைகளை பயன்படுத்த வசதியாக இருக்கும். இந்தியா முழுக்கவே பெண்களுக்கு நல்ல கழிப்பறை இல்லாத நிலை உள்ளது. பெங்களூர், மும்பை போன்ற பெருநகரங்களில் கூட இதுதான் நிலையாக இருக்கிறது. அதை சரி செய்யும் வகையில்தான் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இந்த கக்கூஸ் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் போன்ற சில நகரங்களில் இந்த ஆப் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+