“அண்ணாமலை, ஆர்.என்.ரவி வழியில் விஜய்”.. லிஸ்ட் போட்டு பதிலடி கொடுத்த நாகை MLA ஆளூர் ஷாநவாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை, ஆளுநர் ரவி ஆகியோரைத் தொடர்ந்து அவதூறான இட்டுக்கட்டிய பொய்களை வாய்க்கு வந்ததை தவெக தலைவர் விஜய் பேசத் தொடங்கியுள்ளார் என ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். படத்துக்கு 6 மாதங்கள் கால்ஷீட் கொடுத்ததுபோல், அரசியலுக்கு தற்போது 6 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய் என ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் நேற்று நாகையில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கடுமையாக விமர்சித்துப் பேசிய நிலையில், ஒரு கட்சித் தலைவருக்கு ஊடகங்களை எதிர்கொள்வது என்பது அடிப்படை தகுதி, அதை முதலில் விஜய் வளர்த்துக் கொள்ளட்டும் என நாகை விசிக எம்.எல்.ஏ ஆளுர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.

Aloor Shanavas Accuses Vijay of Echoing Annamalai and Governor Ravi with Fabricated Lies

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி விசிக எம்.எல்.ஏ. ஆளுர் ஷாநவாஸ், "நாகையில் முழுக்க முழுக்க பொய் தகவல்களை தவெக தலைவர் விஜய் பரப்பிவிட்டு சென்றுள்ளார். அவதூறுகளை இட்டுக்கட்டிய பொய்களை விஜய் பேசுகிறார். பாஜகவினர் போல பொய் பேசுகிறார்.

தமிழ்நாட்டு அரசியல் களத்தில் 2 முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என முன்மதிப்பீடு செய்யப்பட்டு களத்தில் இறக்கி விடப்பட்டார்கள். ஒருவர் அண்ணாமலை, ஒருவர் ஆளுநர் ரவி. அவர்கள் இரண்டு பேரும் செய்தது எல்லாம் பொய் சொல்வது, வாயில் வந்ததைப் பேசுவது. அவதூறு கருத்துகளை விதைப்பது. தங்கள் கோட்பாட்டுக்காக பொய்யையும் புரட்டையும் பரப்பும் வேலை செய்து வந்தார்கள்.

அவர்கள் இரண்டு பேரின் நிலை தற்போது என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சக்திகளை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள். ஒருவர் தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து தூக்கப்பட்டார். இன்னொருவர், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு வாயை மூடிக் கொண்டிருக்கிறார். பொய் பேசியதால் மக்களால் நிராகரிக்கப்பட்டு, மக்களிடம் அம்பலப்பட்டு அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அண்ணாமலை, ஆளுநர் ரவியை தொடர்ந்து அவதூறான இட்டுக்கட்டிய பொய்களை வாய்க்கு வந்ததை விஜய் பேச தொடங்கியுள்ளார். அவர்களின் இடத்தைப் பிடிக்க வந்துள்ளார். நாகப்பட்டினத்தில் செய்த பணிகளை எல்லாம் செய்யவில்லை என பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்கிறார் விஜய். யாரோ எழுதிக் கொடுத்ததைப் பேசி இருக்கிறார் விஜய்.

நாகப்பட்டினத்தில் நிறைய புதிய திட்டங்களை செய்து வருகிறோம், செய்திருக்கிறோம். அதுகுறித்து எதுவும் தெரியாமல் வாய்க்கு வந்ததைப் பேசி இருக்கிறார். எல்லாமே பொய். ஒரு தலைவர் இளைஞர்களை வசப்படுத்தி வைத்திருக்கும் தலைவர் ஒரு நல்ல அரசியலை கற்பிக்க வேண்டும். அண்ணாமலை, ஆர்.என்.ரவி அரசியலை கற்பிக்கிறார் விஜய்.

விஜய் பரப்புரையின்போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டும் என அவர் கட்சியின் மாவட்ட செயலாளர்தான் கடிதம் கொடுத்திருக்கிறார். ஆனால் அரசாங்கம் திட்டமிட்டு செய்வது போன்ற தோற்றத்தை விஜய் ஏற்படுத்துகிறார். முன்னுக்கு பின் முரணாக பொய்யை சொல்லி கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார். விஜய் அரசியலை நேர்மையாக செய்யலாம். புதிய அரசியலை செய்யலாம்.

அதை விட்டுவிட்டு ஏற்கனவே மண்ணில் இருந்து துடைத்து எறியப்பட வேண்டிய அரசியலான அவதூறு அரசியல், வன்ம அரசியலை விஜய் ஏன் கையில் எடுக்கிறார்? திட்டங்கள் குறித்து எந்த ஆய்வும் செய்யாமல், எந்தவித அடிப்படை புரிதலும் இல்லாமல் வன்மத்தோடு பொய்யை சொல்ல வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

விஜய் நாகப்பட்டினத்தில் வந்து பேசியதில் அப்டேட்டே இல்லை. 5 வருடங்களுக்கு முன்பு பேச வேண்டியதை இப்போது வந்து பேசி இருக்கிறார் விஜய். எடப்பாடி ஆட்சி காலத்தில் இதை பேசி இருந்தால் விஜய் சொல்வது உண்மை. ஆனால், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும்போது விஜய் வந்து பேசுவது உண்மைக்குப் புறம்பானது. படத்துக்கு 6 மாதங்கள் கால்ஷீட் கொடுத்ததுபோல், அரசியலுக்கு தற்போது 6 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய். அவரின் அரசியல் தமிழ்நாட்டு அரசியலுக்கு உகந்தது அல்ல." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+