கிருஷ்ணகிரி கம்பீரம்.. "தெற்கில் இருந்து இந்திய வரலாறு எழுதப்பட வேண்டும்".. பூரித்து சொன்ன ஸ்டாலின்
சென்னை: "இந்தியாவின் வரலாறு, தெற்கில் இருந்து துவங்கி எழுதப்பட வேண்டும் என்ற, நம் முழக்கம் மெய்ப்பட பணிகளை தொடர்வோம்" என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்
தமிழர்கள் பண்டைய நாகரீகத்தினர் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள். தமிழகத்தின் கீழடியில்தான் நிறைந்திருக்கின்றன.. கீழடியில் இதுவரை நடந்து முடிந்துள்ள அத்தனை அகழாய்வுகளும் உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளன.. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருட்களின் மூலம் தமிழர்கள் வரலாறு மிகவும் தொன்மையானது என்பது கணக்கிடப்பட்டுள்ளது..

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் சொல்லும்போது, "இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்துதான் தொடங்கப்பட வேண்டும் என்று பல அறிஞர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இப்போது, தமிழ்நாட்டிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதை கீழடி ஆய்வுகள் மூலமாக உறுதி செய்யப்படக்கூடிய சூழலை நாம் இன்றைக்கு பார்க்கிறோம்.
நம்முடைய பண்பாடு - காப்பாற்றப்பட வேண்டும். நம்முடைய கலாச்சாரம் - பாதுகாக்கப்பட வேண்டும். உடனடியாக மத்திய அரசும் அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு மாநில அரசும் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கி அதற்குரிய அழுத்தத்தை தரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வில் தமிழி எழுத்துப் பொறிப்புக்கொண்ட பானை ஓடுகள் கண்டெடுப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர் அகழாய்வுத்தளத்தில் புதிய கற்காலப்பண்பாட்டைக் கண்டறிய அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இங்கு உடைந்த நிலையில் புதிய கற்காலக் கருவி கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து, இடைக்கால வரலாற்றுக் காலத்தைச் சார்ந்ததாகக் கருதப்படும் இரும்பிலான ஏர்க்கலப்பையின் கொழுமுனைக் கிடைக்கப்பெற்றது.
சென்னானூர் அகழாய்வில் 90 செ.மீ முதல் 108 செ.மீ வரையிலான ஆழத்தில் தமிழி எழுத்துப்பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பாறைகளில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக் கல்வெட்டுகளில் வேள்ஊர், மதிரை, இவகுன்றம், நெல்வெளிஇய், இலஞ்சி, கருஊர், முசிறி, வெள்அறைய், தேனூர், அகழ்ஊர், கோகூர் போன்ற ஊர்ப்பெயர்கள் காணப்படுகின்றன. தற்பொழுது சென்னானூர் பானை ஓட்டில் ஊகூர் என்ற ஊர்ப் பெயர் கிடைக்கப்பெற்றுள்ளது சிறப்பானதாக கருதப்படுகிறது" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, "இந்தியாவின் வரலாறு, தெற்கில் இருந்து துவங்கி எழுதப்பட வேண்டும் என்ற, நம் முழக்கம் மெய்ப்பட பணிகளை தொடர்வோம்" என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்..
இதுதொடர்பாக முதல்வர் விடுத்திருக்கும் அறிக்கை இதுதான்: "தடைகளை கடந்து தரவுகளை சேகரிக்கிறோம். மூடியுடன் பானை, பாசிமணிகள், சுடுமண் கிண்ணங்கள், தொட்டி, உறைகிணறு, வெள்ளியிலான முத்திரை காசு, சிவப்பு வண்ண கொள்கலன், தமிழி பானை ஓடு, இரும்பிலான ஏர் கலப்பையின் கொழுமுனை, தக்களி, தந்தத்தால் செய்யப்பட்ட பகடை காய், சுடுமண் சிற்பம், உணவு கிண்ணம், செம்பில் செய்யப்பட்ட அஞ்சனக்கோல், ஆணி என, அகழாய்வுகளில் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
தமிழரின் வரலாற்றையும், பண்பாண்டையும், அறிவியல் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துக்கூற நாம் மேற்கொண்டுள்ள பயணம், சரியான திசையில் செல்வதை, இது உறுதி செய்கிறது. இந்தியாவின் வரலாறு, தெற்கில் இருந்து துவங்கி எழுதப்பட வேண்டும் என்ற, நம் முழக்கம் மெய்ப்பட பணிகளை தொடர்வோம்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications