சென்னை வந்து புதுச்சேரி செல்லும் அமித்ஷா.. வழக்கம்போல் ட்விட்டரில் டிரெண்டாகும் #Go_Back_Amitshah
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வர உள்ள நிலையில் ட்விட்டரில் #Go_Back_Amitshah என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக தொடங்கி இருக்கிறது.
Recommended Video
நாளை புதுச்சேரியில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒருநாள் சுற்றுப்பயணம் வருகிறார்.
இதற்கான பயண திட்டத்தில் கர்நாடக தலைநகர் பெங்களூரு விமான நிலையம் வந்து, அங்கிருந்து புதுச்சேரி செல்ல முடிவெடுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக சென்னை மாற்றப்பட்டுள்ளது.

சென்னையில் தங்கும் அமித்ஷா
இன்று மாலை டெல்லியிலிருந்து எல்லை பாதுகாப்பு படையின் தனி விமானத்தில் புறப்படும் அமித்ஷா இரவு 7:30 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு ஆவடியில் இருக்கும் சி.ஆர்.பி.எஃப்-இன் முகாம் அலுவலகத்தின் விருந்தினர் மாளிகையில் இரவு தங்க உள்ளார். நாளை காலை 8:40 மணிக்கு சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் அவர் புறப்பட இருக்கிறார்.

புதுச்சேரியில் ஒருநாள்
காலை 9:30 மணியளவில் புதுச்சேரிக்கு சென்றடையும் அமித்ஷா அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, மாலை 5:30 மணியளவில் தனி ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். 6:15 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தடையும் அமித்ஷா, அங்கிருந்து எல்லை பாதுகாப்புப் படையின் தனி விமானத்தில் டெல்லிக்கு திரும்பிச் செல்கிறார்.

டிரெண்டாகும் #Go_Back_Amitshah
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழ்நாடு வரும் நேரத்தில் எல்லாம் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #GobackModi, #GobackAmitsha போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது அமித்ஷாவின் வருகையை எதிர்த்து #Go_Back_Amitshah என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் தமிழர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
|
இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு
குறிப்பாக டெல்லி ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியர் வீடுகள் இடிப்பு, ராம நவமி கலவரங்கள், கர்நாடக மத பிரச்சனைகள் போன்றவற்றை குறிப்பிட்டு இந்த ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை இணைப்பு மொழியாக்க வேண்டும் என அமித்ஷாவின் கருத்தை இந்த ஹேஷ்டேக்கை பகிர்ந்து விமர்சித்துள்ள தமிழர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தமிழணங்கு படத்தை பகிர்ந்துள்ளனர். -
-
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications