’ஆப்ரேசன் 10’ ரஜினி சொன்னதையே திரும்ப சொன்ன அமித் ஷா! காலியாகிறதா அதிமுக கூடாரம்? கலகலத்த கமலாலயம்!
சென்னை : நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வத்தை தனித்தனியாக சந்திக்காதது, இன்று சென்னை வந்த அமித் ஷா ரஜினி கூறியதையே திரும்ப கூறியது உள்ளிட்ட விவகாரங்களால் அதிமுக 'மேல் மட்ட' தலைவர்கள் சற்று பதட்டத்திலேயே இருக்கின்றனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசியலில் மாபெரும் மக்கள் இயக்கமாக இருக்கும் அதிமுகவின் கடந்த கால சில நிகழ்வுகளை அந்தக் கட்சியினரே ரசிக்கவிவில்லை என்று தான் கூற வேண்டும் .ஈபிஎஸ் ஓபிஎஸ் இடையேயான அதிகார மோதல் தான் இதற்கு காரணம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் மோடியா? இந்த லேடியா? என அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா ஆவேசமாக பேசியது இந்திய அரசியலில் பேசுபொருளானது. சொன்னது போல அந்தத் தேர்தலில் இந்தியா முழுவதும் பாஜக பெரு வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் படுதோல்வியை சந்தித்தது.

அதிமுக மோதல்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை தங்களது கட்டுப்பாட்டிற்குள் பாஜக வைத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும். அணிகள் இணைந்தது, துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றது தொடர்ந்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது என எல்லா விஷயங்களிலும் பாஜகவின் தலையீடு இருக்கிறது என்பதை அதிமுகவினரே ஒப்புக்கொள்கின்றனர். தற்போதைய அதிகார மோதலில் பாஜக ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்பட்டாலும் இருவரையுமே தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவே அந்த கட்சி தலைமை விரும்புகிறது.

அமித் ஷா
அதன் வெளிப்பாடாகத்தான் பிரதமர் தற்போதைய தமிழக வருகையின் போது ஓபிஎஸ்ஸையும் எடப்பாடி தனித்தனியாக சந்திக்க மறுத்தது எனக் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று தமிழகம் வந்துள்ள அமித்ஷாவும் அதிமுகவை குறி வைத்து சில விஷயங்களை பாஜக நிர்வாகிகளிடம் பேசி இருக்கிறார். கமலாலயத்தில் அமித் ஷா பேசியுள்ள விஷயங்கள் குறித்த இந்த தகவல் அதிமுக தரப்புக்கு கிடைத்ததில் இருந்தே மேல்மட்ட தலைவர்கள் அனைவரும் பதட்டத்தில் இருக்கிறார்களாம். அப்படி என்ன பேசினார் அமித்ஷா?

அரசியல் வெற்றிடம்
தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் இன்று அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில் அவர்களிடம் பேசிய அமித்ஷா,"கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி கூறியதையே மீண்டும் பதிவு செய்திருக்கிறார். அதாவது கருணாநிதி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறது. இதை பாஜக சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் கடுமையாக உழைத்தால் நிச்சயம் ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்" எனக் கூறியிருக்கிறார்.

அதிமுக தலைகள் பதற்றம்
மேலும் தமிழ்நாட்டில் பத்து மக்களவைத் தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்றும் அதற்கான வியூகங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கியிருக்கிறார். அதிமுக கூட்டணியை விட்டால் பாஜகவுக்கு வேறு வழியில்லை என்றாலும், தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளதா எனவும் அறிக்கை அளிக்க அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பாக அதிமுக தலைமையை இணைக்க முயற்சி எடுக்குமாறு கூறியுள்ளார். இல்லையே அதிமுக கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட தயங்க வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, அதிமுக அதற்குரிய பலனை அனுபவிக்கும் என கூறியதாகவும் இந்த தகவல்கள் தான் அவர்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications