சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆம்பன் புயல் LIVE UPDATES: ஆம்பன் தாக்கம்: புவனேஸ்வரில் பிங்க் மற்றும் ஊதா நிறத்தில் காணப்பட்ட வானம்

Google Oneindia Tamil News

சென்னை: ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷா மாநிலங்களின் சேத பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார்.

Newest First Oldest First
6:33 AM, 22 May

ஆம்பன் புயல் தாக்கி சென்ற நிலையில் வானம் பிங்க் மற்றும் ஊதா நிறத்தில் இருந்தது ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வானம் பிங்க் மற்றும் ஊதா நிறத்தில் இருந்தது
https://tamil.oneindia.com/news/chennai/amphan-storm-live-updates-the-cyclone-may-hit-bengal-and-odisha-385943.html
11:10 PM, 21 May

ஆம்பன் புயல் பாதிப்பு சேதம்: மே.வங்கம், ஒடிஷாவில் பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்
11:05 PM, 21 May

ஆம்பன் புயலால் கொல்கத்தாவில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு
10:22 PM, 21 May

ஒடிஷா, மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் கோரத்தாண்டவமாடியிருப்பது அதிர்ச்சி தருகிறது- மு.க.ஸ்டாலின்
7:45 PM, 21 May

ஆம்பன் புயலால் ஒடிஷாவில் 45 லட்சம் பேர் கடுமையாக பாதிப்பு என தகவல்
7:43 PM, 21 May

ஆம்பன் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
6:07 PM, 21 May

தமிழகத்தில் சென்னை உட்பட 14 நகரங்களில் சதத்தை தாண்டி கொளுத்திய வெயில். சென்னை, திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு.
6:06 PM, 21 May

வடதமிழகத்தில் 3 தினங்களுக்கு விவசாயிகள், மக்கள் திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்கவும்-வானிலை மையம். வடதமிழகத்தில் 3 நாட்களுக்கு காலை 11.30 மணி முதல் 3.30 வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். வடதமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை உயர்ந்து காணப்படும்- சென்னை வானிலை மையம். தென்கிழக்கு அரபிக் கடல், கேரளா கடற்பரப்பில் சூறாவளி காற்று வீசும்- மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை. மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசும். மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளுக்கு அடுத்த 48 மணிநேரத்துக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்- வானிலை மையம்.
4:01 PM, 21 May

மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் 72 பேர் பலி- மமதா பானர்ஜி. கொல்கத்தாவில் மட்டும் 12 பேர் உயிரிழந்ததாக மமதா அறிவிப்பு.
12:21 PM, 21 May

தமிழகத்தில் அடுத்த 3 நாளைக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம். வட மாவட்டங்களில் இயல்பை 3 டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கும்: வானிலை மையம்.
10:45 AM, 21 May

கொல்கத்தாவில் ஆம்பன் புயலால் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இந்த காற்றின் வேகம் கிட்டதட்ட அட்லாண்டிக் சூறாவளியை ஒத்தது என அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
9:41 AM, 21 May

புயல் பாதிப்பால் கொல்கத்தா நகரில் நேற்று முதல் மின்சாரம் துண்டிப்பு, மக்கள் அவதி
9:09 AM, 21 May

ஆம்பன் புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 27 கிமீ வேகத்துடன் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்தது: வானிலை மையம் தீவிர புயல் பலவீனமடைந்து பங்களாதேஷை மையமாகக் கொண்டுள்ளது: வானிலை மையம் கொல்கத்தாவிலிருந்து வடகிழக்கில் சுமார் 270 கிமீ தொலைவில் உள்ளது: வானிலை மையம்
9:06 AM, 21 May

கொல்கத்தாவில் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் தேசிய மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்
9:05 AM, 21 May

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள விமான நிலைய சாலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மறுசீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குநர் எஸ்.என். பிரதான் தெரிவித்தார்
9:04 AM, 21 May

மேற்கு வங்கம்: ஆம்பன் புயல் கரையை கடந்த நிலையில் கொல்கத்தாவின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. பல இடங்களில் நீர் தேங்கி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் சூறாவளி ஆழ்ந்த தாழ்வழுத்தமாக பலவீனமடைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
9:00 AM, 21 May

ஒடிசா மாநிலம் பாலசோரில் ஆம்பன் புயலால் கனமழை மற்றும் சூறாவளி காற்று நேற்று தாக்கிய நிலையில், இன்று இயல்பு நிலை திரும்பி உள்ளது. மக்கள் வழக்கம் போல் அன்றாட பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
8:48 AM, 21 May

ஆம்பன் புயலால் கொரோனாவை விட மிகப்பெரிய பேரிடர்: மேற்கு வங்க முதல்வர். ஆம்பன் புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி கவலை. மேற்கு வங்கத்தில் கொரோனாவால் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல். ஆம்பன் புயலில் சிக்கி 5500 வீடுகள், அழிந்து போனதாக தகவல். மேற்கு வங்கத்தில் ஆம்பனால் ஒரு டிரில்லியன் ரூபாய் அளவுக்கு சேதம்: மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் 5லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
9:52 PM, 20 May

ஆம்பன் புயல்: உருக்குலைந்து போன பெருமரங்கள்
9:51 PM, 20 May

ஆம்பன் புயலால் சீறிய வங்க கடல்
9:49 PM, 20 May

ஆம்பன் வீழ்த்திய பெருமரங்கள்
9:43 PM, 20 May

ஆம்பன் புயலின் சீற்றம்
9:42 PM, 20 May

ஆம்பன் புயலின் பேயாட்டத்தில் உருக்குலைந்த சாலைகள்
8:41 PM, 20 May

ஆம்பன் தாண்டவத்தால் உருக்குலைந்து போன மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நகர வீதிகள்
8:12 PM, 20 May

மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயலின் கோர தாண்டவத்துக்கு 4 பேர் உயிரிழப்பு. மேற்கு வங்கத்தில் மணிக்கு 160 கி.மீ முதல் 170 கி.மீ வரையில் புயல் காற்று.
6:12 PM, 20 May

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்
6:03 PM, 20 May

திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. வேலூரில் 107.2 டிகிரி; சேலத்தில் 102 டிகிரி வெயில் பதிவு.
5:40 PM, 20 May

மே.வங்கம்- வங்கதேசம் இடையே கரையை கடந்த ஆம்பன் சூப்பர் புயலின் ருத்ர தாண்டவ காட்சிகள்
4:58 PM, 20 May

மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே பேய் மழையுடன் அம்பன் புயல் கரையைய கடக்கிறது. அம்பன் புயல் இன்னும் 2 மணி நேரம் தொடர்ச்சியாக கரையை கடக்கும்.
4:33 PM, 20 May

ஃபானி புயலின்போது ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில், முன்னெச்சரிக்கை- என்.டி.ஆர்.எப் தலைவர் பிரதான். அனைத்து டீம்களுக்கும் மரம் வெட்டும் இயந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது- பிரதான்.
READ MORE

Amphan Storm Live Updates: The cyclone may hit Bengal and Odisha

English summary
Amphan Storm: The cyclone may hit Bengal and Odisha . Tamilnadu will see good rain today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X