16-வது மாடியில் இருந்து குதித்து.. பிளஸ் 1 மாணவி தற்கொலை.. அதிர்ச்சியில் உறைந்துபோன தலைநகர்!
சென்னை: சரியாக படிக்கவில்லை என பள்ளி ஆசிரியர் பெற்றோரிடம் புகார் அளித்ததால் 11-ம் வகுப்பு மாணவி 16-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனி, எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன்(38). மளிகை கடைக்காரர். இவரது மகள் வைஜெயந்தி (16). பிரபல வேலம்மாள் பள்ளியில் 11-ம் வகுப்பு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் படித்து வந்தார்.

ஆசிரியர் புகார்
மாணவி சரியாக படிப்பதில்லை என்றும் வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் ஒருவர், தந்தை பாஸ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, '' உங்கள் மகள் வைஜெயந்தி சரியாகப் படிக்கவில்லை, வீட்டுப்பாடம் ஒழுங்காக செய்வதில்லை'' என்று நேற்று காலை அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்துள்ளார்.

தந்தை மீது பயம்
இது பள்ளியில் இருக்கும் மாணவி வைஜெயந்திக்கு தெரியவந்தது. வீட்டிற்கு சென்றால் ஆசிரியர் புகார் கொடுத்தது தொடர்பாக தந்தை திட்டுவார் என்ற பயத்தில் அவர் இருந்துள்ளார். இதனால் மாணவி வைஜெயந்தி, பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லாமல் கொரட்டூர் வாட்டர் கேனால் சாலையில் உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு பகுதிக்கு சென்றுள்ளார்.

தற்கொலை
அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற மாணவி வைஜெயந்தி, லிப்ட் மூலம் 16 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறி, மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்ததும் அந்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை
இதனை தொடர்ந்து கொரட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் வீட்டில் கூறியதால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உள்ளே நடந்து சென்று லிப்டில் ஏறி 16-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications