இதுக்கெல்லாமா பணி நீக்கம் செய்வாங்க.. சாப்ட்வேர் இன்ஜினியருக்கு நேர்ந்த கதியை பாருங்க.. ரொம்ப பாவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துர்கா பூஜை விழாவை கொண்டாடுவதற்காக 3 வாரத்துக்கு முன்பாகவே மேனேஜர் மற்றும் நிறுவனத்தின் சிஇஓ ஆகியோரின் அனுமதி பெற்று விடுமுறை எடுத்த சாப்ட்வேர் இன்ஜினியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கார்ப்பரேட் நிறுவனங்களில் திடீர் பணி நீக்கம் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனால் இப்போது பல்வேறு ஐடி நிறுவனங்கள் அடிக்கடி முன்னறிவிப்பு இன்றி கொத்து கொத்தாக ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். மேலும் பணி நீக்கத்துக்கு அவர்கள் சொல்லும் காரணம் ஏற்க முடியாததாக இருக்கும்.

an-indian-techie-fired-from-a-startup-after-taking-approved-leave-for-the-durga-puja
Photo Credit:

அந்த வகையில் தான் தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வரும் ஒருவர் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ரெடிட் தளத்தில் பாதிக்கப்பட்ட நபர் புலம்பி தள்ளி உள்ளார். r/developersIndia என்ற பெயரிலான கணக்கில் அந்த ஊழியர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

அந்த பதிவில், ‛‛இன்று நான் மிகவும் முட்டாள்தனமான காரணத்துக்காக பணி நீக்கம் செய்யப்பட்டேன். எச்ஆர் தனது பணி நீக்க மெயில் அனுப்பி உள்ளார். அதில் பெர்மிஷன் இன்றி விடுமுறை எடுத்த காரணத்துக்காக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் நான் உண்மையில் 3 வாரங்களுக்கு முன்பே எனது மேனேஜரிடம் விடுமுறை எடுப்பது பற்றி தெரிவித்தேன். அதன்பிறகு நிறுவனத்தின் சிஇஓவிடம் அனுமதி பெற்றேன். அதன்பிறகு தான் விடுமுறையை எடுத்தேன்.

ஆனாலும் என்னை பணியில் இருந்து நீக்கி உள்ளனர். கடந்த 4 மாதங்களாக என்னிடம் கடுமையாக வேலை வாங்கினார்கள். வேலை நேரத்தை நீட்டிப்பு செய்து பார்க்க வைத்தனர். இதனால் மிகவும் சோர்வடைந்துள்ளேன். எனக்கு ஏதாவது நிவாரணம் தருவார்களா?, பணி அனுபவ சான்று தருவார்களா? சம்பள ஸ்லிப் தருவார்களா? என்பது தெரியவில்லை. இதனால் நான் அதிக வலியுடன் இருக்கிறேன். இந்த சூழலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு யாராவது உதவுங்கள். ஆலோசனை கூறுங்கள்'' என்று கூறியுள்ளார்.

இந்த பதிவை பார்க்கும் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஒருவர், ‛‛கவலையை விடுங்கள் ப்ரோ.. உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்'' என்று கூறியுள்ளார். இன்னொருவரோ, ‛‛கேட்க வருத்தமாக இருக்கிறது. நீங்கள் சிறிய நிறுவனத்தில் இருப்பதாக நினைக்கிறேன். அங்கு இதுபோன்று நடப்பது சாதாரணமானது தான். விரைவில் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்த்துகள்'' என கூறியுள்ளார். மற்றொருவரோ, ‛‛சகோதரரே.. இதனை நல்ல சான்ஸ் என்று கருதி வேறு நிறுவனத்தில் வேலைக்கு முயற்சி செய்யுங்கள்.. விரைவில் வேலை கிடைக்கும்'' என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+