மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்! நண்பனுக்காக போராடிய அமைச்சர் அன்பில் மகேஸ்! கை கூடி வந்த காரியம்!
சென்னை: தனது நண்பன் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்கி அழகு பார்க்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போராடி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என முதல் குரல் கொடுத்தது முதல் தொடர்ந்து பல பேட்டிகளில் அதற்கான அவசியம் குறித்து பேசி வந்தவர் அமைச்சர் அன்பில் மகேஸ்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி என்ற ஒரு தொகுதிக்குள் மட்டும் உதயநிதியின் திறமைகள் அடைபட்டுவிடக் கூடாது என்றும் தமிழகம் முழுவதும் அவரிடம் உள்ள திறமை சென்றடைய வேண்டும் எனக் கூறியவர் அன்பில் மகேஸ்.

உதயநிதி ஸ்டாலின்
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறுவார் என ஆருடங்கள் கூறப்பட்ட நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த வாய்ப்பை மகனுக்கு கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்தும் பல முறை அமைச்சரவை மாற்றம் நிகழ போவதாகவும் அதில் உதயநிதி இடம்பெறப் போவதாகவும் தகவல்கள் உலா வந்தன. அதுவும் அவருக்கு இந்த துறைதான் என்கிற அளவுக்கு எல்லாம் வாட்ஸ் அப்களில் செய்திகள் ரவுண்ட் அடித்தன.

முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கினால் அது தேவையற்ற விமர்சனங்களை உருவாக்கலாம் என்பதால் சற்று யோசித்திருக்கிறார். ஆனால் உதயநிதி ஸ்டாலினின் நண்பரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தான் தனது நண்பனை அமைச்சராக்கி அழகு பார்க்க வேண்டும் என தொடர்ந்து போராடி வந்தார். இன்னும் சொல்லப்போனால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என பொதுவெளியில் முதல் ஆளாக விருப்பத்தை பகிர்ந்தவரும் அவர் தான்.

அமைச்சர் அன்பில் மகேஸ்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை தொடர்ந்து அமைச்சர்கள் சிவசங்கர், முத்துசாமி, செஞ்சி மஸ்தான், மூர்த்தி, எவ வேலு என வரிசையாக பலரும் மேடைகளில் பேசத் தொடங்கினர். இதனிடையே அமைச்சர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக மட்டுமல்லாமல் தொகுதிப் பணிகள், செஸ் ஒலிம்பியாட் முன்னேற்பாடுகள், சட்டமன்ற செயல்பாடுகள், என பல நிகழ்வுகளில் உதயநிதி ஸ்டாலினின் திறமையை கண்கூடாக அறிந்த பின்னரே அவரை மாண்புமிகுவாக்க முதல்வர் பச்சைக் கொடியே காட்டியிருக்கிறார்.

பூரிப்பில் அன்பில்
இதனிடையே நாளை தனது நண்பன் உதயநிதி அமைச்சராக பதவியேற்க உள்ளதால், தனது வெகுநாள் ஆசை நிறைவேறிவிட்டது என்கிற மன நிறைவுடன் காணப்படுகிறார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
-
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
விஜய் VS உதயநிதி VS அண்ணாமலை.. தமிழ்நாடு அரசியலில் புதிய இன்னிங்ஸ்.. யாருக்கு சாதகம் தெரியுமா? -
உங்களுக்கு எதிராதான் பேசி இருக்காரு! விஜயுடன் துரை வைகோ பேசியது என்ன? நைசாக விசாரித்த உதயநிதி












Click it and Unblock the Notifications