அன்புமணி ராமதாஸ் வைத்த முக்கிய கோரிக்கை.. முதல்வர் ஸ்டாலின் ஏற்பாரா?
சென்னை: கொரோனா கால பாதுகாப்புப் பணியில் உயிர்த்தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என பாமக இளைஞரணி தலைவரும், ராஜ்யசபா எம்புயுமான அன்புமணி ராமதாஸ், முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்து வருகிறார்கள். குறிப்பாக முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், காவலர்கள் அதிகம் உயிரிழக்கிறார்கள்.
கொரானா தடுப்பு பணியில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு தமிழக அரசு 25லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதேபோல் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கும் 25லட்சம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

காவலர்கள் குடும்பம்
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட் பதிவில், கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு, கொரோனா கால பாதுகாப்புப் பணியில் உயிர்த்தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்

ஊரடங்கு நடைமுறை
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை நடைமுறைப்படுத்துபவர்கள் காவலர்கள் தான். தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் மக்களை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளை செய்வதால் அவர்கள் கொரோனா தொற்றுக்கு எளிதில் ஆளாகின்றனர்

பாதுகாப்பு பணி
தமிழ்நாட்டில் 54காவலர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நோயிலிருந்து மக்களைக் காக்கும் பணியில் உயிர்நீத்த அவர்களின் தியாகம் இணையற்றது. அவர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படவேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து காவலர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படவேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.

ஏற்பாரா ஸ்டாலின்?
ஏற்கனவே கொரானா தடுப்பு பணியில் உயிரிழந்த முன்கள வீரர்களான மருத்துவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 25 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதேபோல் காவலர்களின் குடும்பத்திற்கும் வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸி கோரிக்யை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications