2026ல் பாமக ஆட்சி.. அதுவும் ’இந்த மாதிரி’..! உறுதியாய் அன்புமணி! ‘அதுக்கு’ கூடவா பாஜக தடை போடும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை : 2026ஆம் ஆண்டில் கூட்டணியுடன் காமராஜர் ஆட்சியை தமிழ்நாட்டில் பாமக அமைப்போம் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

காமராஜரின் 120வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ்," பசியோடு மாணவர்கள் படிக்க முடியாது என்று பள்ளி கூடங்களில் மதிய உணவு கொண்டு வந்து கல்வி புரட்சி செய்தவர் காமராஜர். அது மட்டுமல்லாது தொழிற்சாலைகள் கொண்டு வந்து தொழில் புரட்சி செய்தார், நீர்த்தேக்கங்கள் கொண்டு வந்து சாதனை செய்தவர் காமராஜர் என்று கூறினார்.

 காமராஜர் ஆட்சி

காமராஜர் ஆட்சி

காமராஜர் ஆட்சியை தமிழ் நாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது எங்கள் கனவு என்றும் நிச்சயமாக அதை பாட்டாளி மக்கள் கட்சி கொண்டு வரும் என்றும் கூறினார். சென்னை விமான நிலையத்திற்கு காமராஜர் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பலகையில் அவர் பெயர் இல்லை ..விரைவில் அவர் பெயரை பலகையில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் பாமக போராட்டம் நடத்தும்

அதிமுக உட்கட்சி பிரச்சனை

அதிமுக உட்கட்சி பிரச்சனை

அதிமுக கட்சி சூழல் என்பது உட்கட்சி பிரச்சனை அதில் நாங்கள் கருத்து கூற விரும்பவில்லை. 2026ல் தமிழ் நாட்டில் பாமக கூட்டணி ஆட்சியை அமைக்கும் ,அனைவரும் சேர்ந்து ஆட்சியை அமைப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எங்களது வாழ்தை நாங்கள் கூறி உள்ளோம். நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று சொல்லவில்லை ,அடுத்த 10,15 ஆண்டுகளில் எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டு தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியாது

2026ல் பாமக ஆட்சி

2026ல் பாமக ஆட்சி

எங்கள் இலக்கு 2026ல் பாமக ஆட்சி அமைப்பது தான். காங்கிரஸ் கூட காமராஜர் ஆட்சியை மறந்து விட்டது ,நாங்கள் தான் அதை பற்றி பேசி வருகிறோம். மகாராஷ்ட்ரா கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்நாட்டிலும் வெள்ளம் வர போகிறது. நீரை சேமிக்க வேண்டும் அதற்கு நாம் பல அணைகளைக் கட்ட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் நெருக்கடி

நாடாளுமன்றத்தில் நெருக்கடி

சென்னைக்கு இன்னும் 1 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 10 எரிகள் அவசியம் உருவாக்க வேண்டும். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் இதெல்லாம் எங்கள் எதிர்கால திட்டம் . ஜனாயகத்தின் அடிதளம் நாடாளுமன்றம் தான் ..அன்றாடம் இயல்பாக பேசும் வார்த்தைகளுக்கு தடை போட்டு உள்ளார்கள் .இது போன்ற நெருக்கடியை கொடுக்க கூடாது..எங்களது கருத்துகளை நாங்கள் எடுத்து சொல்ல அனுமதிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+