ஓபனிங் நல்லாத் தான் இருக்கு.. ஃப்னிசிங் சரியில்லையே! ஸ்லோவா இருக்கு.. விஜய் அரசை விளாசிய அன்புமணி!
சென்னை: திமுகவிற்கு மாற்றாக தான் தமிழக வெற்றி கழகத்திற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர். ஊழலுக்கு எதிராக ஆரம்பத்தில் வேகமாக இருந்த புதிய அரசு தற்போது மெத்தனமாகவும் மெதுவாகவும் உள்ளது எனவும், ஊழல் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க தமிழக வெற்றிக்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக சார்பில் 2026-2027 ஆம் ஆண்டு நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டார். தொடர்ந்து 24 வது முறையாக பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது," 2026 - 2027 நிதியாண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் 6,71, 891 கோடி ரூபாயாக இருக்கும் எனவும்,கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம் வரி அல்லாத வருவாயாக 2,17,945 கோடி ரூபாய் ஈட்ட முடியும்.
அன்புமணி ராமதாஸ்
திமுக ஆட்சியில் மணல் கொள்ளையை தடுத்திருந்தால் 40 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்திருக்கும். தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் பாமகவின் நோக்கம்.
ஆனால் தற்போது 100 மீட்டரில் பார் வைக்கலாமா? 200மீட்டரில் பார் வைக்கலாமா என பேசுகிறார்கள். ரெஸ்டோ பார் அமைக்கலாமா ? என ஆலோசனை செய்கிறார்கள். மொத்தமாக முடித்து விட வேண்டியது தான்.தமிழகத்தில் உள்ள பீர் தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.
விஜய் அரசு
கனிமவள துறை,நெடுஞ்சாலை, பொது பணி துறையில் நடந்த ஊழல் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். புதிய அரசு மெத்தனமாக மெதுவாக செயல்படுகிறதை இளைஞர்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நம்பிக்கையை இழந்து விட போகிறார்கள். திமுகவுக்கு மாற்றாக தான் மக்கள் உங்களை தேர்வு செய்து உள்ளார்கள்.
ஊழல் வழக்கு
போதை பொருட்கள் தடுப்பு பிரிவுக்கு டிஜிபி தரத்தில் உள்ள அதிகாரியை நியமிக்க வேண்டும்.மணல் கொள்ளை, கனிம வளக்கொள்ளை, பணியாளர் நியமன ஊழல், ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட ஊழல் புகார்கள் குறித்து தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட வேண்டும். ஊழல் வழக்குகளை விசாரிக்க 5 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.
சொத்து விவரம்
முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் முதல் நாளில் சொத்து விவரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை சிறப்பு நீதிமன்றம் மூலம் தண்டிக்கும் அதிகாரத்தை லோக்அயுக்தா அமைப்புக்கு வழங்கி, சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்.
மெட்ரோ திட்டம்
மதுரை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசு மீண்டும் அனுமதி மறுத்துள்ளது.அதற்கு காரணமாக போதிய மக்கள் தொகை இல்லை என்று மத்திய அரசு சொல்கிறது.25 லட்சம் மக்கள் இருக்கும் இடங்களுக்கு தான் மெட்ரோ திட்டம் என்று மத்திய அரசு சொல்கிறது.நகரில் வசிக்கும் மக்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் வந்து செல்லும் மக்கள் தொகையும் சேர்க்க வேண்டும்.
மத்திய அரசுக்கு தொடர் அழுத்தம் கொடுத்து மெட்ரோ திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.
கல்வி கொள்கை
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும்.ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கட்டமைப்பு உள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கல்வி கொள்கை உள்ளது. இந்தியாவில் அனைத்து மாநிலத்திற்கும் ஒரே கல்வி கொள்கையை கொண்டு வரமுடியாது.கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் நுழைவு தேர்வு போன்ற பிரச்னை வராது.
தமிழக வெற்றிக்கழக அரசு
திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது.தற்போதைய அரசு திமுக வின் ஊழல் மீது கவனம் செலுத்த வேண்டும். தமிழக வெற்றி கழக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை பிளாக் லிஸ்ட் செய்ய வேண்டும். ஊழல் பணத்தை அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும்.ஆரம்பத்தில் தமிழக வெற்றிக்கழக அரசு வேகமாக இருந்தார்கள் தற்போது வேகம் குறைந்துவிட்டது. தமிழக அரசு ஊழல் ஊழல்களுக்கு எதிராக வேகத்தை அதிகரிக்க வேண்டும். வேகத்தை அதிகரிக்க வைப்போம். " என்றார்.


Click it and Unblock the Notifications
