Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 ரூபாய்க்கு ஒரு ஏக்கர்.. தமிழகத்திற்கு வந்த நிறுவனத்தை தட்டி தூக்கிய ஆந்திரா.. பாவம் திருநெல்வேலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரியாவைச் சேர்ந்த பிரபல காலணி உற்பத்தி நிறுவனமான ஹ்வாசியுங் தமிழ்நாட்டில் திட்டமிட்டிருந்த அதன் முதல் இந்திய தொழிற்சாலையை, ஆந்திரப் பிரதேசத்திற்கு மாற்றி உள்ளது. திருநெல்வேலியில் ₹1,720 கோடியில் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டிருந்த ஹ்வாசியுங் நிறுவனம், ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் என்ற ஆந்திர அரசின் திட்டம் காரணமாக, ஆந்திராவிற்கு தொழிற்சாலையை மாற்றி உள்ளது. முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு, ஆந்திரா இடையே நிலவிய போட்டியில், ஆந்திரா வசம் தொழிற்சாலை போய்விட்டது.

தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்ட ஹ்வாசியுங் நிறுவனம், உலகின் மிக பிரபலமான பிராண்டான அடிடாஸின் முக்கிய சப்ளையர்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனம் ஸ்போர்ட்ஸ் காலணிகளை உற்பத்தி செய்வதில் முன்னணியில் இருக்கிறது.
ஆரம்பத்தில், ஹ்வாசியுங் நிறுவனம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டானில் தனது உற்பத்தி ஆலையை அமைக்கத் திட்டமிட்டிருந்தது.

Andhra Pradesh government snatched away Hwaseung that came to Tamil Nadu by 1Rs per acre policy

இதன்படி ஹ்வாசியுங் நிறுவனம் ரூ.1,720 கோடி முதலீடு செய்வதாகவும், இதன் மூலம் சுமார் 20,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் குறிப்பிட்டு, ஆகஸ்ட் மாதம் தமிழக அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. என்ன தான் ஒப்பந்தம் கையெழுத்தான போதிலும், தற்போது ஹ்வாசியுங் நிறுவனம் தனது முடிவை மாற்றி, ஆந்திரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த சட்டமன்றத் தொகுதியான குப்பம் பகுதியில் 100 ஏக்கர் நிலம் காலணி தொழிற்சாலை நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கு ஆண்டுக்கு சுமார் 2 கோடி ஜோடி விளையாட்டு காலணிகள் உற்பத்தி செய்யப்படும் என்றும், முக்கியமாக ஏற்றுமதிக்காக இந்த உற்பத்தி மையம் இருக்கும் என்றும் ஹ்வாசியுங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திருநெல்வேலியில் செயல்பட வேண்டிய ஆலை திடீரென எப்படி ஆந்திராவிற்கு இடம் மாறியது என்று பார்த்தால் சில முக்கியமான காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை பார்ப்போம்.

ஒரு ஏக்கர் ஒரு ரூபாய்

ஒரு ஏக்கர் ஒரு ரூபாய் என்று தொழில் நிறுவனங்களை கூவி கூவி அழைத்து நம்பவே முடியாத சலுகைகளை ஆந்திர அரசு தந்தது தான் காரணம் என்கிறார்கள். ஆந்திர அரசு ஏராளமான வேலைவாய்ப்பு மற்றும் பல கோடி முதலீடுகளுடன் வரும் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கிறது. அந்த வகையில் தகுதியுடைய மெகா திட்டங்களுக்கு, ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய்க்கு தருகிறது. இதுதான் முக்கிய காரணம்.

குப்பம் தொகுதியில் வருகிறது

அடுத்ததாக இன்னொரு காரணம் என்றால், குப்பம் தொகுதி என்பது கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ளது. இது சென்னை பெங்களூரு புதிய தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது. எனவே தொழிற்சாலைகள் அமைத்தால் எளிதாக சென்னை வழியாக ஏற்றுமதி செய்ய முடியும். என்பது முக்கிய காரணம். மூன்றாவது காரணம் என்று பார்த்தால், ஏற்கனவே ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்கள் தோல் தொழிற்சாலைகள், காலணி தொழிற்சாலைகளுக்கு பெயர் போனவை.

ஏன் ஆந்திராவிற்கு போனது

சித்தூர் மாவட்டத்திலும் கணிசமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாகவே குப்பம் தொகுதியில் காலணி தொழிற்சாலை அமைக்கும் போது, தொழிலாளர் பிரச்சனையும் வராது என்று நம்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் ஹ்வாசியுங் நிறுவனம் அதிக தொழிலாளர்கள் தேவை என்று விரும்புகிறது. தொழில் தெரிந்தவர்கள் இருந்தால் எளிது என்று நினைப்பதும் காரணமாக பார்க்கப்படுகிறது. ஹ்வாசியுங் நிறுவனம் மூன்று கட்டங்களாகச் செயல்பட போகிறது. மொத்தம் சுமார் 20,000 பேருக்கு வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.

தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய முதலீடு, ஆந்திராவிற்கு போனதற்கு ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் என்ற ஆந்திராவின் சலுகை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது போனற் பெரிய முதலீடுகளை ஈர்க்க இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த முதலீடு மாற்றம், தமிழ்நாட்டிற்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதேநேரம் ஆந்திரப் பிரதேசத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

பொம்மை முதல்வர் , நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என "ஷோ" காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off (பின்வாங்கும்) செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது.

இதற்கு ஆன காரணங்கள் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம், சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு, படுகுழியில் பெண்கள் பாதுகாப்பு, விண்ணை முட்டும் கமிஷன் ஊழல்கள், என அடிப்படையே சீர்குலைந்த இந்த ஸ்டாலின் ஆட்சி, விளம்பர மாடல் நிகழ்ச்சிகளும், வர்ணஜால விளம்பரங்களையும் காட்டினால் மட்டும் தொழில் நிறுவனங்கள் வந்துவிடுமா?

பொம்மை முதல்வர் தான் இப்படி என்றால், அவர் அரசில் தொழில் துறைக்கு வாய்த்திருக்கும் அமைச்சரோ, வெள்ளைப் பேப்பரைக் காட்டும் அமைச்சராக தான் இருக்கிறார். இத்தகைய வெறும் Show-off ஆட்சியாளர்கள் நடத்தும் ஆட்சியில், எப்படி தொழில்கள் தமிழகத்திற்கு வரும்? தமிழ்நாடு தொழில்களுக்கான வாய்ப்புகளின் பூமியாக இருந்தது. இன்று, முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியால் அது தவறவிட்ட வாய்ப்புகளின் பூமியாக மாறிவிட்டது. புதிய தொழில்களால் தங்களுக்கு வேலை கிடைக்கும் என நம்பிய தமிழக இளைஞர்களை ஏமாற்றிய கையாலாகாத ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனம். இன்று நம்மை விட்டுச் சென்ற தொழில் நிறுவனங்கள், 2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும், மீண்டும் தமிழ்நாட்டைத் தேடி வரும்!" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+