"அரியர் பாய்ஸ்களுக்கு ஒரு சூப்பர் ஆஃபர்".. சர்பிரைஸ் கொடுத்த அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: 2001-02 கல்வியாண்டிற்கு பிறகு எத்தனை அரியர்ஸ் வைத்திருந்தாலும் வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறக் கூடிய செமஸ்டர் தேர்வுகளின் போது மாணவர்கள் எழுதிக்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
படிக்கும் காலத்தில் சரியாக படிக்காமல் அரியர்ஸ் வைத்து விட்டு.. பிறகு உரிய காலத்திலும் அரியர்சை எழுதி கிளியர் செய்யாமல்.. பட்டமும் பெற முடியாமல் ஏராளமான இளைஞர்கள் இருந்து வருகிறார்கள்.
இதுபோன்ற இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் தான் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் ஒரு சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளது.

3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
அதாவது, கடந்த 2001-2002 ஆம் கல்வி ஆண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3-வது செமஸ்டருக்கு பிறகு அரியர் வைத்து இருந்தால் வரும் செமஸ்டர் தேர்வில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதற்காக தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும், வரும் டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்ககலைக்கழகம் தெரிவித்துள்ளது.

9 தேர்வு மையங்கள்
மேலும் www.coe1.annauniv.edu . என்ற இணையதளத்தில், விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லயோலா ICAM இன்ஜினியரிங் காலேஜ், விழுப்புரம் இன்ஜினியரிங் கல்லூரி, கோவை அண்ணா பல்கலைக்கழக கிளை , ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி, திருச்சி என்ஜினியரிங் கல்லூரி, மதுரை அண்ணா பல்கலைக்கழக கிளை, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக கிளை, ஆரணி இன்ஜினியரிங் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி என 9 பல்கலைக்கழகங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

டிடி அல்லது ஆன்லைன் மூலமாக
மேலும் விண்ணப்பதாரர்கள் இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கட்டணத்தை டிடி மூலமாகவோ, ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம் என்றும்.. தேர்வு எழுத உள்ள பாடங்களை மாணவர்கள் விண்ணப்பித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும்
அண்ணா பல்கலைக்கழகத்தின் நடப்பு ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெற உள்ளது. 2001-02 கல்வியாண்டிற்கு பிறகு எந்த ஆண்டில் அரியர் வைத்திருந்தாலும் தேர்வு எழுத சிறப்பு அனுமதியை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது. எத்தனை ஆண்டுகள் அரியர் வைத்திருந்தாலும் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டம் வாங்க அரிய வாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த சிறப்பு அனுமதி மூலம், அரியர்ஸ் இருப்பதால் பட்டம் பெற முடியாமல் தவித்த பல இளைஞர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. படித்து முடித்த பிறகும் பட்டம் பெற முடியாததால் உயர்கல்வி, வேலை வாய்ப்பு என பல வகைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி பட்டம் பெற வழி ஏற்பட்டுள்ளது. அரியர்ஸ் இருப்பதால் பட்டம் பெற முடியால் இருந்த பல நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அனுமதி பயனளிக்கும் என்று தெரிகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications