நட்டா முதலில் சொன்னார்.. 7.5% இடஒதுக்கீட்டை எடப்பாடி அறிமுகம் செய்தார்: சொல்கிறார் அண்ணாமலை
சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அறிவுறுத்தலின்படியே மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
12 ஆம் வகுப்புக்கு பிறகு மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
இதனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்தும் மாணவர்கள் மருத்துவம் படிக்கக்கூடிய வாய்ப்புகளை இழந்தனர்.

தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம்
நீட் நுழைவுத் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவர்கள் பலர் தற்கொலையும் செய்துகொண்டனர். நீட் தேர்வுக்கு எதிராக தொடக்கத்திலிருந்தே சட்டப்போராட்டங்களை நடத்தி வரும் தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றியும் ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை.

7.5% இடஒதுக்கீடு
நீட் நுழைவுத் தேர்வு காரணமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய அரசுப் பள்ளி மாணவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரையை ஏற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டை வழங்கியது. இதன் காரணமாக ஏராளமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்.

இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு
இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து தனியார் பள்ளி மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 7.5% உள் ஒதுக்கீடு காரணமாக தங்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பது அவர்கள் தரப்பு வாதம். இதேபோல், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களும் 7.5% உள் ஒதுக்கீட்டை எதிர்த்து நீதிமன்ற படியேறினர்.

உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இந்த வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பரத சக்கரவர்த்தி அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், 7.5% உள் ஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி இடஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நட்டா சொல்லி எடப்பாடி செய்தார்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்குவதை உறுதிபடுத்திய உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழ்நாடு பாஜக வரவேற்கிறது. எங்கள் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது உள் ஒதுக்கீடு வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்தார். இந்த உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்த எங்கள் கூட்டணி கட்சியான அதிமுகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார். -
-
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications