தீபாவளி: பட்டாசு வெடிக்க நேரம் அறிவிப்பு - ரயில்களில் கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி என்றாலே பட்டாசு, பலகாரம், புத்தாடைதான். கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பண்டிகை களையிழந்தது. இந்த ஆண்டு மூன்கூட்டிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் ஆர்வமுடன் புத்தாடைகளையும் பட்டாசு, பலகாரங்களையும் வாங்க ஆரம்பித்து விட்டனர்.

தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் பட்டாசு கடைகளை திறக்க வியாபாரிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை தீயணைப்பு துறையினர் நேரில் ஆய்வு செய்த பிறகு தான் இறுதியாக பட்டாசு கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் இதுவரையில் 6,111 கடைகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

18ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு

18ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை பெருநகரில் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளதாக காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக கூறினார்.

தொடர் கண்காணிப்பு

தொடர் கண்காணிப்பு

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான கோயம்பேடு, தியாகராய நகர், வளசரவாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் ஏற்படாமல் தடுக்க சென்னை பெருநகர் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்துள்ளோம். சென்னையில் 7,800 திருடர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு

பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் உத்தரவின்படி 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என பிரித்து வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்தாலோ, அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடித்தாலோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

பேருந்து, ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டும் 382 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். தீபாவளி பண்டிகையன்று மக்கள் அதிகம் கூடும் பகுதியில் செல்லும் பெண்கள், தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை பாதுகாப்பான முறையில் அணிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பொது சுகாதாரத்துறை

பொது சுகாதாரத்துறை

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டாசுகளை வெடித்த பிறகு அவை எளிதில் தீப்பிடிக்காத அளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றை சேகரித்து எரியக்கூடிய பொருட்களில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோர் மேற்பார்வையில் பட்டாசு வெடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கைகளால் கொளுத்த வேண்டாம்

கைகளால் கொளுத்த வேண்டாம்

சுவாசப் பிரச்சனை இருப்பவர்கள் பட்டாசு வெடிக்கும்போது வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அருகில் நின்று பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஒரு கை தூரத்தில் நிற்க வேண்டும். தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது காலணிகளை பயன்படுத்துங்கள். பட்டாசுகளை பயன்படுத்திய பிறகு சோப்பு தண்ணீரால் கைகளை கழுவ வேண்டும். கையில் பட்டாசுகளை கொளுத்த கூடாது. தீபங்கள் மற்றும் மெழுகுவர்த்தி எரியும் இடத்தில் பட்டாசுகளை வைக்க வேண்டாம். மின் கம்பம் மற்றும் கம்பிகளுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். பாதி எரிந்த பட்டாசுகளை தூக்கி எறியக் கூடாது. பட்டாசுகளை வெடிக்க தீப்பெட்டி அல்லது லைட்டர்களை பயன்படுத்தக் கூடாது. சானிடைசர் பயன்படுத்திய பிறகு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகள் சிறை தண்டனை

3 ஆண்டுகள் சிறை தண்டனை

ரயில் பயணத்தின்போது பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று மத்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில்கள் மூலமாக பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க ரயில்வே போலீசார் தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர் . வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் ரயில்களின் மூலமாக பட்டாசுகளை எடுத்து செல்ல நேரிடும். கோவையில் இருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்வதை தடுக்க கோரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சோதனை

சோதனை

ரயில்கள் மற்றும் பேருந்துகளில் எளிதில் தீப்பற்றும் பொருட்கள்,பட்டாசுகள்,டீசல் ,பெட்ரோல் விலையை ஏற்றி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி ரயில்கள் மூலமாக பட்டாசு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மெட்டல் டிடக்டர் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் பயணத்தின் போது பட்டாசு எடுத்து சென்று பிடிப்படுவோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதிக்க நேரிடும் என பயணிகளுக்கு விழிப்புணர்வு காட்டுதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை சட்டப்பிரிவு 164 இன் படி பட்டாசு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல முயன்றால் மேற்கூறிய தண்டனை வழங்கப்படும் என மத்திய ரயில்வே நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+