இன்னைக்கு திருப்பதிக்கு போறீங்களா.. பிளானை தள்ளி போடுங்க! தெற்கு ரயில் கொடுத்த முக்கிய அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் இன்று திருத்தணியுடன் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அரக்கோணத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரயில்கள் பாதியில் நிறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி திருமலை கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதில் கணிசமானவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து ரயில்களில் இரண்டு வழிகளில் திருப்பதிக்கு போக முடியும். தென் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக திருப்பதிக்கு போகலாம். அதேபோல சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் அரக்கோணம் வழியாக போக முடியும்.

Tirupati Chennai Train


இந்நிலையில் இன்று சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் திருத்தணியுடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், “

அரக்கோணம் பணிமனையில் புதன்கிழமை காலை 11.10 முதல் பகல் 1.10 மணி வரை பராமரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு காலை 9.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் திருத்தணியுடன் நிறுத்தப்படும். மேலும், அரக்கோணத்துக்கு காலை 9.10 மற்றும் 11 மணிக்கு புறப்படும் ரயில், திருத்தணிக்கு காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் திருவள்ளூருடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக அரக்கோணத்தில் இருந்து காலை 11.15, பகல் 12 மணிக்கும், திருத்தணியில் இருந்து பகல் 12.35 மணிக்கும் புறப்படும் ரயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வரும். அதுபோல் வேலூரில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10 மணிக்கு புறப்படும் ரயில் சித்தேரியுடன் நிறுத்தப்படும்.

ஆவடி, பட்டாபிராம்: ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் ஆவடி, பட்டாபிராமிடையே இரவு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் புதன்கிழமை (ஜூலை 31) மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பட்டாபிராமில் இருந்து ஆவடிக்கு புதன்கிழமை இரவு 11.50 மணிக்கும், மறுமாா்க்கமாக வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படும்.

மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு இரவு 11.40 மணிக்கும், நள்ளிரவு 12.05 மணிக்கும் புறப்படும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராமுக்கு இரவு 10.40 மணிக்கு புறப்படும் ரயில் ஆவடியுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக பட்டாபிராமில் இருந்து இரவு 10.45, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்பட்டு சென்ட்ரல் வந்தடையும்.

சூலூா்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் கொருக்குப்பேட்டை, வியாசா்பாடி வழியாக ஆவடி சென்றடையும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+