போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வரும்.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்!
சென்னை: அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆவின் நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில் ராஜேந்திரபாலாஜி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து அவர் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தலைமறைவான ராஜேந்திர பாலாஜி
ஆனால் இந்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யலாம் என்று போலீசாருக்கு அனுமதி அளித்தது. இந்த தகவல் அறிந்தவுடன் ராஜேந்திரபாலாஜி தலைமறைவாகி விட்டார். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை போலீசார் தேடி வருகின்றனர். தனிப்படை போலீசார் மதுரை, கோவை, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தேடப்படும் குற்றவாளி
மேலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் ராஜேந்திர பாலாஜியின் இருப்பிடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தொடர்ந்து போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வருவதால் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடாமல் இருப்பதற்காக விமான நிலையங்களுக்கு போலீசார் "லுக்-அவுட்" நோட்டீசும் கொடுத்துள்ளார். இதனால் ராஜேந்திரபாலாஜி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு புகார்
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான செல்வராஜ் என்பவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்துள்ளார். '' அரசு பள்ளி ஒன்றில் ராஜேந்திரபாலாஜி மூலம் ஊழியர் வேலை வாங்கி தருவதாக கூறியதன் பேரில் எனது நண்பர்களான ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பரமகுரு, முத்துசாமி ஆகியோரின் மூலமாக திருச்சியில் பள்ளி நடத்தி வரும் ஒருவரிடம் ரூ.27 லட்சம் பேசி, ரூ. 11 லட்சம் கொடுத்தேன்.
Recommended Video

ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கடி
ஆனால் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்து விட்டனர். ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரின் மீதும் விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து புகார்கள் பாய்வதால் ராஜேந்திர பாலாஜிக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications