ஸ்கெட்ச் போட்டு தூக்கியதோடு.. பொறுப்பையும் கொடுத்து.. திரும்பி பார்க்க வைத்த மு.க.ஸ்டாலின்!

செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்பு தந்ததால் திமுக பக்கம் வர பலர் ஆர்வமாக உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஸ்டாலின்

    சென்னை: ஒரே மாசத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கி செந்தில் பாலாஜிக்கு புதிய பொறுப்பையும் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளது அரசியல் வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    2000-ம் ஆண்டுதான் அதிமுகவில் இவர் சேர்ந்தார். ஆனால் கிட்டத்தட்ட 10 வருடங்களிலேயே எல்லாரும் வாயை பிளந்து பார்க்கும் அளவுக்கு அசுர வளர்ச்சி எடுத்தார்.

    போக்குவரத்து துறை அமைச்சராக உயர்ந்ததோடு, கட்சியிலும், ஆட்சியிலும் எக்கச்சக்க செல்வாக்கோடு திகழ்ந்தார் செந்தில் பாலாஜி. சசிகலா குடும்பத்தோடு நெருக்கம் ஒரு பக்கம், "அம்மா"வின் செல்லப்பிள்ளையாக மற்றொரு பக்கம் என ரவுண்டி கட்டி வலம் வந்தார்.

    தூக்கி வைத்த ஜெ.,

    தூக்கி வைத்த ஜெ.,

    ஜெயலலிதா, எப்போவெல்லாம் சட்ட ரீதியான பிரச்சனை எதிர்கொள்கிறாரோ, எப்போவெல்லாம் நெருக்கடிக்கு ஆளாகிறாரோ, அப்போதெல்லாம் அவற்றினை எதிர்கொள்ள தேடும் நபர்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இன்னும் ஒருபடி மேலே சொல்லப்போனால், ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பொறுப்பில் அமரவைக்கலாமா என யோசிக்கும்போது, அந்த பட்டியலில் செந்தில் பாலாஜியின் பெயரும் இருக்கும்.

    டிடிவி தினகரன்

    டிடிவி தினகரன்

    ஆனாலும் தூக்கி வைத்த வேகத்திலேயே தூக்கி அடிக்கவும் செய்தார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே செந்தில் பாலாஜி மீண்டும் கட்சிக்குள் வருவதை விரும்பாமல் போய், டிடிவி தினகரனிடமும் முக்கியத்துவம் குறைந்துபோய்.. கடைசியில் திமுக தலைவர் ஸ்டாலினின் கீழ் போய் தாய் கழகத்தில் இணைந்தார்.

    சேகர் பாபு

    சேகர் பாபு

    ஏற்கனவே அதிமுகவில் இருந்து திமுகவுக்கு போன சேகர் பாபுவுக்கு முக்கிய பொறுப்பை கொடுத்து, இப்போது வரை மரியாதையாக நடத்தி வருகிறது திமுக. இப்போது செந்தில் பாலாஜியை கரூர் மாவட்ட பொறுப்பாளராக உயர்த்தி உள்ளது மீண்டும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

    அதிமுக, அமமுக,

    அதிமுக, அமமுக,

    கட்சி தாவல், இணைப்பு விழா, புதிய பொறுப்பு என அடுத்தடுத்த நிகழ்வுகள் ஒரே மாசத்தில் திமுகவில் நடந்துள்ளது. இதனால் கதிகலங்கி போய் இருப்பது அதிமுக, அமமுக தரப்பு மட்டுமல்லாது திமுகவில் இருக்கும் மூத்த தலைகளுக்கே அள்ளு கிளம்புகிறதாம்.

    திமுக பக்கம் சாய முடிவு

    திமுக பக்கம் சாய முடிவு

    கருணாநிதி இறந்ததிலிருந்து ஸ்டாலினின் செயல்பாடுகளை உற்று நோக்கி வரும் அதிமுக, அமமுக தரப்பு, நாமும் இப்படி திமுக பக்கம் போனால் நிச்சயம் மரியாதை கிடைக்கும் என நம்புகிறார்கள். ஆட்சிக்கு வர எவ்வளவோ செலவு செய்தும், இன்னும் போட்டதை எடுக்க முடியாலும், வருங்கால நிலை என்னாகும் என்றும் தெரியாமலும் இருப்பதால் திமுக பக்கம் சாய யோசித்து வருகிறார்களாம்.

     குக்கர் சின்னம்

    குக்கர் சின்னம்

    அதிலும் 2 முக்கிய அதிமுக மூத்த தலைகள் கிட்டத்தட்ட முடிவு எடுக்கும் நிலையில் உள்ளனர். அதேபோல, 2 வருடமாக தொகுதி பக்கம் போக முடியாமல், கோர்ட், கேஸ், என அலைந்து, எம்எல்ஏ பதவிகளும் பறிபோய், கடைசியில் நேற்று குக்கர் சின்னமும் பறி போன அமமுக தரப்பில் ஒருசிலரும் செந்தில்பாலாஜிக்கு தந்த பொறுப்பை ஆற்றாமையுடன் பார்த்து வருகிறார்கள்.

    மூத்த தலைவர்கள்

    மூத்த தலைவர்கள்

    இது போக, திமுகவின் பழைய தலைகளே செந்தில் பாலாஜியை கண்டு நடுங்கி போய் உள்ளதாம். "வலதுகரம், தனது கம்ப்யூட்டர், மூளைக்காரர், திறமைசாலி, பசை உள்ள பார்ட்டி"என்றெல்லாம் பெயர் எடுத்த செந்தில் பாலாஜி இனி திமுகவின் வளர்ச்சிக்கு இது அத்தனையையும் பயன்படுத்துவார் என்பதால், சில மூத்த தலைவர்களுக்கு இது கிலியை ஏற்படுத்தி உள்ளது.

    பிளஸ் பாயிண்ட்

    பிளஸ் பாயிண்ட்

    இதுபோக செம கடுப்பில் உள்ள அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எந்த அளவுக்கு செந்தில்பாலாஜியை தொகுதியில் எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பும் அதிமுக தரப்பில் ஏற்பட்டுள்ளது. எப்படியோ செந்தில் பாலாஜியை ஒரே மாசத்தில் ஸ்கெட்ச் போட்டு தூக்கி உச்சாணியில் ஏற்றி வைத்த ஸ்டாலினுக்கு இது இன்னொரு பிளஸ் பாயிண்ட்!!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+