மொத்தமாக எல்லாமே மாறுது! ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் அருகே வருகிறது புது பஸ் நிலையம்! செம
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில்தான் ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
நேற்று மாலையில் இருந்து ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பது இல்லை. கிளாம்பாக்கத்தில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல் காலையில் கோயம்பேடு உள்ளே வரும் பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கத்தோடு நிறுத்தும் முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.

புதிய பேருந்து நிலையம்: இந்த நிலையில்தான் ஆம்னி பேருந்துகளுக்கு கிளாம்பாக்கம் அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, முடிச்சூரில் 28 கோடி ரூபாய் செலவில் 5 ஏக்கர் பரப்பளவில் ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடம் அமைக்கப்படும் என CMDA தெரிவித்துள்ளது.
அதுவும் அடுத்த மாதமே இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, கிளாம்பாக்கத்தில் 144 பார்க்கிங் இடங்களும், பேருந்துகள் இயக்க 100 பேருந்துகள் வசதி கொண்ட பேக்களும் உள்ளன, மேலும் ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் பிரச்சினையை அரசு நிவர்த்தி செய்து வருகிறது. இதை கருத்தில் கொணடே.. கிளாம்பாக்கத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் முடிச்சூர் அருகே புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க உள்ளனர்.
ஆம்னி பேருந்துகள் கட்டுப்பாடு: இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் சில முக்கியமான விவரங்களை நம்மிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கிளாம்பாக்கத்தோடு அரசு பேருந்துகள் நின்றுவிடுவதால் பலரும் தனியார் பேருந்துகளை புக் செய்ய தொடங்கி விட்டனர். தனியார் பேருந்துகள் கோயம்பேடு வரை செல்வதால் இந்த புக்கிங் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அரசு பேருந்துகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டு உள்ளது.
அரசு பேருந்துகள் உள்ளே வராது என்பதால் அதற்கான புக்கிங் வெகுவாக குறைந்ததை அடுத்து ஆம்னி பேருந்துகளை இனி உள்ளே வர விடக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. உள்ளே வருவதற்க்கு ஆம்னி மட்டுமே ஒரே வழி என்பதால் மக்கள் பலரும் அதையே விரும்புகிறார்கள் என்பதே இந்த பிரச்சனைக்கு காரணம். இதை சரிகட்டவே புதிய கட்டுப்பாடு வந்துள்ளது.
இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகள் கடந்த 18ம் தேதி முதல் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் முடிந்த நிலையில் இனி பேருந்துகள் கோயம்பேடு வரை வராது.

அதாவது சென்னை உள்ளே வராமல் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு இந்த பேருந்துகள் நிற்கும். முக்கியமாக கோயம்பேடு வரை இந்த பேருந்துகள் இனி வராது. சென்னை உள்ளே வர இனி நீங்கள் வேறு பேருந்து பிடித்துதான் வர வேண்டும். இது தனியார் பேருந்துகளுக்கு பொருந்தாது என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
பேருந்து நிலையம்: சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயங்கிய பேருந்துகள் இனி எந்தந்த வகையில் இங்கிருந்து இயங்கும் என்பது பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அதற்கான அளிக்கப்பட்ட விளக்கத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பொறுத்தவரை இன்றைக்கு கோயம்பேட்டிலிருந்து இயங்குகின்ற பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications