வேலூர் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கு! தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை வேலூர் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்த ஞானசேகரன். வருமானத்திற்கு அதிகமாக ரூ.3 கோடியே 15 லட்சம் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம், கடந்த 2016 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதி வேல்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரி கணக்கில் சொத்துக்களை குறிப்பிட்டுள்ளதால் அவை சட்டபூர்வமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களாக கருத முடியாது என்றும் முன்னாள் எம்எல்ஏவின் மனைவிக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரம் ஏதும் இல்லை என்றும் வாதிட்டார்.
மேலும் இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமானவரித்துறை கணக்கின் அடிப்படையில் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளது என்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாக கூறப்படக்கூடிய காலகட்டத்திற்கு முன்பே இருவருக்கும் ஏராளமான சொத்துக்கள் இருந்ததாகவும் வாதிட்டார்.
குற்ற பத்திரிகை தாக்கல் செய்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியே என்றும் அதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை நீதிபதி வேல்முருகன் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications