தூர்தர்ஷன் இயக்குனராக தமிழே தெரியாத ஒருவரை நியமித்துள்ளது சரியா?.. சு. வெங்கடேசன் எம்.பி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரும், மதுரை எம்.பி.யான சு. வெங்கடேசன் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான திட்டம் கொண்டு வந்தால் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார். அதுவும் தமிழகதிற்குள் ஏதாவது ஒரு வகையில் இந்தி திணிப்பு நடந்தால் முதல் ஆளாக எதிர்ப்பு குரல் கொடுத்து விடுவார்.

இதற்கிடையே தமிழகத்தில் அரசு செய்தி நிறுவனமான தூர்தர்ஷனில் இயக்குனர் பொறுப்புக்கு தமிழ் அல்லாத வேறு ஒருவர் நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு செய்வது சரியா?

மத்திய அரசு செய்வது சரியா?

இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், 'தமிழக மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் முதன்மை நோக்கத்தை கொண்ட அரசு நிறுவனமான தூர்தர்ஷன் நிறுவனத்தின் செய்திப்பிரிவு இயக்குனர் பொறுப்புக்கு தமிழே தெரியாத ஒருவரை நியமித்துள்ளது சரியா?'' என்று கூறியுள்ளார். மேலும், வங்கிக் கிளைகள் அனைத்திலும், அனைத்து படிவங்களும் தமிழ் மொழியில் வழங்கப்படும் என்று பாரத் ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர் உறுதி அளித்துள்ளார். இதுவே சிறந்த பொங்கல் பரிசு என்றும் சு. வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

மற்றொரு அறிக்கை

மற்றொரு அறிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- சென்னை ஆர்.ஏ.புரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளையில் லாக்கர் படிவம் தமிழில் இல்லாததால் வாடிக்கையாளர் பட்ட இன்னல் குறித்து நான் 29,12.2021 அன்று பாரத ஸ்டேட் வங்கி தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தேன். அதற்கு அவ் வங்கியின் தலைமை பொது மேலாளர் தேவேந்திர குமார் பதில் அளித்துள்ளார்.வாடிக்கையாளர்களுக்கான படிவங்கள் மாநில மொழிகளில் உறுதி செய்யப்படுவது தொடர்பாக வங்கியின் தலைவருக்கு நீங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றோம்.

விரைவில் அவை கிடைக்கும்

விரைவில் அவை கிடைக்கும்

வாடிக்கையாளர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கும், வங்கி சேவைகளை எளிதாக்கவும், சீரிய நுகர்வோர் தொடர்பிற்கும் வழி செய்யும் வகையில் நாங்கள் வங்கியின் படிவங்கள் மற்றும் இதர எழுதுபொருட்களை மாநில மொழி உட்பட மும்மொழிகளில் வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம். அதன்படி மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய வங்கியில் பணம் எடுத்தல், போடுதல் மற்றும் சேமிப்பு, புதிய கணக்கு துவக்கம் வாடிக்கையாளர் சேவை, வரைவோலை/ RTGS / NEFT தொடர்பான பல்வேறு தனிநபர்களுக்கான படிவங்கள் அனைத்தும் ஏற்களவே வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக தமிழில் வழங்கப்பட்டுள்ளது. குறைவாகப் பயன்படுத்தப்படும் சில படிவங்களும் கூட தமிழில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகிறோம், விரைவில் அவை கிடைக்கும்.

 பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி

உங்கள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட கிளைக்கு ஏற்கெனவே மாநில மொழியில் லாக்கரை திறப்பதற்காளன பதிவேடு வழங்கப்பட்டுவிட்டது. மாநில மொழிகளில் அனைத்துப் படிவங்களையும் கட்டாயம் வழங்க வேண்டுமெனவும், தேவையெனில் மேலும் புரிதலுக்காக உள்ளடக்கங்களை வாடிக்கையாளர்களுக்கு விளக்கவும் எங்களது அனைத்து பார்த ஸ்டேட் வங்கியின் கிளைகளையும் அறிவுறுத்தியுள்ளோம்.

இதுவே சிறந்த பொங்கல் பரிசு

இதுவே சிறந்த பொங்கல் பரிசு

சிறந்த வாடிக்கையாளர் சேவையை சற்றும் தளர்வின்றி வழங்குவோம் என பாரத ஸ்டேட் வங்கியின் சார்பாக உறுதியளிக்கிறோம். இதை நாங்கள் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் ஒரு நல்வாய்ப்பாக எடுத்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். பொங்கல் விழாவினையொட்டி பாரத் ஸ்டேட் வங்கியின் சார்பில் இவ்வுறுதி அளிக்கப்பட்டுள்ளது தமிழகத்துக்கான சிறந்த பொங்கல் பரிசாகும். வாங்கியின் பொது மேலாளருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தபால் நிலையத்திலும் தமிழ் படிவங்களை உறுதி செய்வதில் வெற்றி பெற்றோம். இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் தமிழ் படிவங்களை உறுதி செய்வோம். அதற்கான முதல் வெற்றி பாரத ஸ்டேட் வங்கி மூலம் கிடைத்துள்ளது. அனைவருக்கும் மீண்டும் நன்றி'' என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+