நகைக்கடன் கூட்டுறவு வங்கிகளில் அதிகரிப்பு.. கிராமுக்கு ரூ.7000 வழங்க ஒப்புதல்.. செம தங்க நகைக் கடன்
சென்னை: தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைக்கடன் வழங்கப்பட்டு வருகின்றன. அவசர தேவைக்கு பொதுமக்களும் கூட்டுறவு சங்கங்களை நாடி தங்களுக்கு தேவையான தங்க நகைக்கடனை தேர்ந்தெடுத்து கொள்கிறார்கள். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை எகிறிவரும் சூழலில், வங்கிகளில் தங்க நகைக் கடனின் தொகை அதிகரித்து வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நம் நாட்டில் தங்கத்திற்கென்று தனி மதிப்பு எப்போதுமே உள்ளது.. தேவைப்படும் நேரங்களில் பணமாகவும் மாற்றி பெற்றுக்கொள்ள முடிகிறது என்பதால், தங்கத்தின் மதிப்பு எகிறி கொண்டே போகிறது.

உலக பொருளாதார நிலைமைகள், தேவை, புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்றவற்றின் காரணமாக தங்கம் நிலையில் தினசரி அடிப்படையில் மாறுதல் ஏற்படுகிறது.
பொதுமக்களுக்கு அவசரத்துக்கு பணத்தேவை இருக்கிறதென்றால் வங்கிகளில் கடன் வாங்கும் நடைமுறை உள்ளது. வங்கிகளில் தங்க நகைக்கடனை வாங்க பெரிதாக ஃபார்மாலிட்டிகள் கிடையாது.. அதனால்தான் தேசிய அளவிலான வங்கிகள் மட்டுமல்லாது, கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சொசைட்டிகளிலும் தங்க நகைக்கடன் எளிதாகவும், விரைந்தும் வழங்கப்படுகின்றன,
தங்க நகை அடமானம்
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், மாநில, மாவட்ட தலைமை கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு சங்கங்கள் போன்றவைகளில், தங்க நகை அடமானம் பேரில், நகைக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை, 25 லட்சம் பேருக்கு, 25,000 கோடி ரூபாய்க்கு நகைக் கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறதாம். சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப கூட்டுறவு வங்கிகளில், கிராம் தங்கத்துக்கு, 6,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.
கிராமுக்கு ரூ.7000
தற்போது சர்வதேச முதலீட்டாளர்கள், தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருவதால், தங்கம் விலை ராக்கெட் விலைக்கு உயர்ந்துள்ளது.. 22 காரட் ஆபரண தங்கம் கிராம் விலை, 11,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதனால்தான், கூட்டுறவு வங்கிகளில் தங்கத்திற்கு அதிக தொகை கடன் வழங்குவது குறித்து முடிவெடுக்க, கூட்டுறவு துறை உயர் அதிகாரிகள் சமீபத்தில் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள்,
இந்த கூட்டத்தில் நகைக் கடனுக்கு கிராமுக்கு 7,000 ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.. இதற்கான உத்தரவை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விரைவில் பிறப்பிப்பார் என்றும், நகைக் கடனுக்கான புதிய தொகை, அடுத்த வாரம் முதல் வழங்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டுகோள்
இதனிடையே, ஜிஎஸ்டி வரியை குறைக்க நகை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தவாறு உள்ளனர்.. மத்திய அரசு பண்டிகை கால சலுகையாக தங்கம் இறக்குமதிக்கு விதித்துள்ள 6 சதவீத வரியை 2 சதவீதமாகவும், தங்க நகைகளுக்கு விதிக்கப்படும் 3 சதவீத ஜிஎஸ்டி வரியை 1.5 சதவீதமாகவும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இப்படி செய்தால் ஒரு சவரனுக்கு ரூ.3,500 வரை குறையும். இதனால் பண்டிகை காலத்தில் மக்கள் சிறிதளவு தங்க நகைகளை வாங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications