"இப்போலாம் பேஷன்ட்ஸ் வரது இல்லை சார்".. தமிழகத்தில் குறைந்த எஸ்ஓஎஸ் மெசேஜ்கள்.. சரிகிறது கொரோனா?!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்புகள் லேசாக குறைய தொடங்கி உள்ளது. முக்கியமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் குறைய தொடங்கி உள்ளது.

Recommended Video

    Corona Vaccine | சாதித்த தமிழக அரசு.. எப்படி சாத்தியமானது? | Oneindia Tamil

    தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற முதல் இரண்டு நாட்கள். முந்தைய அரசு கடைசி கட்டத்தில் கட்டுப்படுத்தாமல் போன கொரோனா கேஸ்களால் தினசரி பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கிய சமயம். ஒரு பக்கம் ஆக்சிஜன் படுக்கைக்கும், இன்னொரு பக்கம் ரெமிடிஸ்வர் மருந்துக்கும் பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வந்தது.

    ஆனால் தற்போது கடந்த ஒரு வாரமாக ஆக்சிஜன் படுக்கைகள் கேட்டு யாரும் எஸ்ஓஎஸ் மெசேஜ்கள் அனுப்புவது இல்லை. இணையத்திலும், பொதுவாக பெட்களுக்கான தேவை பெரிய அளவில் குறைந்துள்ளது.

    எப்படி?

    எப்படி?

    கடந்த 10 நாட்களுக்கு முன்புவரை சென்னையில் தினசரி கேஸ்கள் 7 ஆயிரத்திற்கும் அதிகமாக சென்றது. இதனால்தான் சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் போனது. அதோடு சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும், 12 -15 ஆயிரத்தை தினமும் தாண்டும் என்றும் கூட எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்னையில் தினசரி கேஸ்கள் தற்போது 4000க்கும் குறைவாக சென்றுள்ளது.

    கீழே சென்றது

    கீழே சென்றது

    இன்னொரு பக்கம் தமிழகத்தில் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா கேஸ்கள் அதிகரிக்கின்றன. மற்ற மாவட்டங்களில் தினசரி கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. கடந்த வாரங்களில் அச்சமூட்டி வந்த பழனி, டெல்டா மாவட்டங்கள் எல்லாம் கொரோனாவில் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது.

    எஸ்ஓஎஸ்

    எஸ்ஓஎஸ்

    பெட்கள் கேட்டும், ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டும் வரும் எஸ்ஓஎஸ் மெசேஜ்கள் குறைந்துள்ளது அல்லது முற்றிலுமாக நின்றுள்ளது. தமிழகம் ஒருவேளை கொரோனா பீக்கை தாண்டிவிட்டதோ என்று நம்பிக்கை கொள்ளும் அளவிற்கு நிலைமை சரியாகி உள்ளது. தமிழகத்தில் நிலைமை கொஞ்சம் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த சில முக்கியமான நடவடிக்கைகளும் முடிவுகளும்தான் காரணம்.

    ஆக்சிஜன்

    ஆக்சிஜன்

    முதல் விஷயம், ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளுக்கான வார் ரூமை உருவாக்கியது, இதை மைய ரீதியாக செயல்பட அனுமதிக்காமல், , மாவட்ட ரீதியாக இயங்க அனுமதித்தது. மாவட்ட வாரியாக மக்கள் எளிதாக ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவமனை பெட்களை பெறும் வசதி ஏற்படுத்தி தரப்பட்டது. இது முதல் சிக்கலை சரி செய்தது.

    ரெமிடிஸ்வர்

    ரெமிடிஸ்வர்

    இன்னொரு பக்கம் ரெமிடிஸ்வர் மருந்துகளை நேரடியாக மருத்துவமனைக்கே விற்கும் முடிவை எடுத்தது. இது கொஞ்சம் தாமதமான முடிவு என்றாலும் ரெமிடிஸ்வர் மருந்துகளுக்கு மக்கள் அலைவது தடுக்கப்பட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் சாதாரண மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களை உயர்த்தியது. தமிழகம் முழுக்க பல இடங்களில் சிகிச்சை மையங்கள் உயர்த்தப்பட்டது.

    சிகிச்சை மையம்

    சிகிச்சை மையம்

    இன்னொரு பக்கம் ஆக்சிஜன் தேவையை தீர்க்கும் வகையில் ஒடிசா, மஹாராஷ்டிரா, பஞ்சாப், வெளிநாடுகளில் இருந்தும் கூட தினசரி முறையில் ஆக்சிஜன் கொண்டு வந்தது. பல இயங்காத ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள், தொழிற்சாலைகளை தூசி தட்டி இயங்க வைத்தது. சிப்காட் மூலம் தொடர்ச்சியாக ஆக்சிஜன் உற்பத்தியை உறுதி செய்து மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்த்தது என்று பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    சோதனை

    சோதனை

    முக்கியமாக நோயாளிகள் பலர் சீக்கிரமே கொரோனா இருப்பதாக கண்டுபிடிக்கப்படுவதால், அவர்கள் உடல்நிலை மோசமாகும் முன் சிகிச்சை பெற முடிகிறது. இதனால் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதி ஆவது குறைந்து, வீட்டிலேயே சிகிச்சை பெற வசதிகள் ஏற்பட்டுள்ளன. சீக்கிரமே இப்படி கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட தினசரி டெஸ்ட்கள் உயர்த்தப்பட்டதும் காரணம். 1 லட்சத்தில் இருந்து 1.70 லட்சமாக டெஸ்ட்கள் உயர்த்தப்பட்டது,

    நோயாளிகள்

    நோயாளிகள்

    இதனால் நோயாளிகள் வேகமாக கண்டறியப்பட்டு, அவர்கள் உடல்நிலை மோசமாகும் முன் சிகிச்சை பெற முடிகிறது. இதுதான் இப்போது மருத்துவமனை தேவை குறைய காரணமாக அமைந்துள்ளது. சென்னையில் கொரோனா கேஸ்கள் குறைந்துள்ளதால், பல மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வரத்து குறைந்துள்ளது. இப்போதெல்லாம் முன்னமாதிரி பேஷன்ட்ஸ் வரது இல்லை என்று சில ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் சந்தோசமாக சொல்கிறார்கள்.

    மாற்றம்

    மாற்றம்

    லாக்டவுன் காரணமாகவும், சென்னை மக்கள் பலர் சொந்த ஊருக்கு சென்றதால் கேஸ்கள் ஒரு பகுதியில் குவியாமல் தடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது எந்த மாவட்டமும் எபிசெண்டர் போல மாறாமலும் தடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கடந்த 15 நாட்களில் செய்யப்பட்டுள்ளதால், தமிழகம் விரைவில் இரண்டாம் அலையை வென்றுவிடுமோ என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+