ஆட்டம் ஆரம்பம்.. "டபுள் ஷாக்"கில் எடப்பாடி பழனிசாமி.. கடைசியாக பாயிண்ட்டை பிடித்து.. ஓபிஎஸ் ஜெர்க்?
எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு ஆதரவாக கோர்ட் உத்தரவு வரும் என்று நம்புகிறாராம்
சென்னை: பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் அதிமுகவில் ஓபிஎஸ் தரப்புக்கு 2 விஷயங்கள் பிளஸ் பாயிண்ட்டாக உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தெம்பாக உள்ளதாம்..!
Recommended Video
பொதுக்குழுவை எப்படியாவது தடுக்க பல வகைகளில் அன்று ஓபிஎஸ் முயன்றாலும், கடந்த ஜூலை 11ம் தேதி எடப்பாடி அந்த பொதுக்குழுவை நடத்திக்காட்டி விட்டார்.
நீதிமன்ற உத்தரவு எடப்பாடிக்கு அப்போது சாதகமாக இருந்த நிலையில், இதனால், பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்தது...

வைரமுத்து
பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.ஆனால், அதிமுக பொதுக்குழு வழக்கில் சுப்ரீம்கோர்ட் உத்தரவு நகல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. உயர்நீதிமன்ற தனி நீதிபதி தங்கள் தீர்ப்பை சுட்டிக்காட்டியது தவறானது என்று தெரிவித்தனர் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள்..

2 வாரங்கள் டைம்
"நாங்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டு அவர்கள் கூட்டவில்லை. தவறுதலாக ஒரு புரிதல் ஏற்பட்டிருக்கிறது. முன்னர் கொடுக்கப்பட்ட எந்த தீர்ப்புகளையும் எடுத்துக் கொள்ளாமல் மிகத் தெளிவாக விசாரணை செய்து தீர்ப்பினை வழங்க வேண்டும்.. நகல் கிடைத்த 2 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்" என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்திருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை தந்தது.

பாயிண்ட்டுகள்
நீதிபதிகள் சொன்ன இந்த பாயிண்ட்டுதான், ஓபிஎஸ்ஸுக்கு தெம்பை தர ஆரம்பித்தது.. இனி இதை வைத்தே அடுத்தடுத்து காய்களை நகர்த்தி, எடப்பாடிக்கு நெருக்கடியை தரவும் முயற்சிகளை கையில் எடுத்தது.. அதாவது, பொதுக்குழுவை கூட்ட சொல்லவில்லை என்பதை சுப்ரீம்கோர்ட்டே தெளிவுப்படுத்திவிட்டதால், இந்த வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கும் என்பதே ஓபிஎஸ்ஸின் நம்பிக்கைக்கு காரணமாக இருந்தது.

இதுதான் அர்த்தம்
அதேபோல, ஜூலை 6ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு பிறகு பிறப்பித்த உத்தரவில், பொதுக்குழுவை நடத்தலாம் அல்லது தடை விதிக்க எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.. அதனால் அதிமுக பொதுக்குழு நடந்தது செல்லாது என்று தீர்ப்பளிக்கப்பட்டால், ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் தொடருவார் என்றே அர்த்தம்.. அதாவது, எடப்பாடியின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவி உட்பட அனைத்து நியமனங்களும் தானாகவே செல்லாததாகிவிடும்..

முதல் சறுக்கல்
நீதிபதிகளின் இந்த உத்தரவுதான், ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த முதல் வெற்றியாகவும், எடப்பாடிக்கு கிடைத்த முதல் சறுக்கலாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.. இன்றையதினம், டெண்டர் முறைகேடு வழக்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் விசாரிக்குமாறு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், இதுவும் ஓபிஎஸ் தரப்புக்கு குஷியை ஏற்படுத்தி வந்தாலும், உச்சநீதிமன்றத்தால் எடப்பாடிக்கு கிடைக்கும் 2வது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
அதேசமயம், எடப்பாடி பழனிசாமி இதனால் சோர்ந்துவிடாமல், மாறாக உற்சாகமாக இருக்கிறது என்கிறார்கள்.. காரணம், உச்சநீதிமன்றத்தை குறிப்பிட்டு ஹைகோர்ட் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தது மட்டும்தான் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.. மற்றபடி, ஓபிஎஸ் புகார் செய்த விஷயங்களில் தங்களுக்கு சாதகமான உத்தரவையே நீதிமன்றம் வழங்கும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் எடப்பாடி தரப்பினர்.. ஓபிஎஸ்ஸை பொறுத்தவரை, பொதுக்குழு நடத்துவதற்கு 15 நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் தர வேண்டும் மற்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து மட்டுமே பொதுக்குழுவுக்கு அழைக்க முடியும் என்ற 2 விஷயங்களை நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தது..

ஹைகோர்ட்
ஆனால், ஜூலை 11ம் தேதி நடந்தது சிறப்புப் பொதுக்குழு என்பதால் நோட்டீஸ் அனுப்பவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.. ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவிலேயே, ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்த முடிவாகிவிட்டது என்பதுதான் ஹைகோர்ட் அன்று பிறப்பித்த உத்தரவுக்கு முக்கிய காரணம்.. அதனால், உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டாமல் இந்த முறை தீர்ப்பு வழங்குவார்கள் என்றும், அந்தவகையில், இந்த முறையும் தங்களுக்கு ஆதரவாகவே உத்தரவு வரும் என்பதே எடப்பாடி டீமின் பெருத்த பலமாக இருக்கிறதாம்.

சான்ஸ்
ஆக, ஓபிஎஸ் டீம் ஒரு விஷயத்தில் நம்பிக்கையாக இருந்தால், எடப்பாடி டீம் வேறு ஒரு விஷயத்தில் நம்பிக்கையுடன் நீதிமன்ற உத்தரவை எதிர்நோக்கி இருப்பதாக தெரிகிறது.. எனவே தீர்ப்பு யாருக்கு சாதகமாக வரும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே கிளம்பி உள்ளது.. எனினும், இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கும்பட்சத்தில், முறைகேடாக கூட்டப்பட்ட பொதுக்குழு குறித்த முக்கிய ஆதாரங்கள், மற்றும் வலுவான வாதங்களை தன் தரப்பில் ஓபிஎஸ் எடுத்து வைத்தால் மட்டுமே, அது எடப்பாடிக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கும் என்கிறார்கள்.. அப்படி நெருக்கடியை உருவாக்கினால், அன்று நடந்த பொதுக்குழு மட்டுமல்ல, தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவி உட்பட அனைத்து தீர்மானங்களுமே செல்லாமல் போகவும் வாய்ப்புள்ளதால், ஓபிஎஸ்ஸுக்கு இன்னொரு சான்ஸ் கிடைக்கக்கூடும் என்கிறார்கள்..!
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications