புஸ்ஸூனு போச்சே.. "கிளி" கூண்டை விட்டு பறக்குது.. பாஜகவின் "பிரம்மாஸ்திரம்".. பின்னாலயே அதிமுக.. பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனித்து போட்டி என்ற புள்ளியை நோக்கி தமிழக பாஜக நகர்வதாக தெரிகிறது.. இதற்கான அறிகுறிகளும் அக்கட்சியில் தென்பட்டு வருகின்றன.. என்னதான் நடக்கிறது பாஜகவில்?

தமிழக பாஜகவை பொறுத்தவரை, இதுவரை அதிமுகவுடன் சமசரம் என்ற பேச்சை எடுக்கவில்லை.. எடப்பாடி பழனிசாமியையும் சமாதானம் செய்யும் முயற்சியிலும் இதுவரை இறங்கவில்லை..
அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி சொல்கிறாரே தவிர, பெரும்பாலான பாஜக தலைவர்கள், மாறுபட்ட கருத்தை கொண்டிருக்கிறார்கள்.

Are these 9 Constitutions in Tamil Nadu and Can Edapadi Palanisamy defeat TN BJPs strategies

பொன்.ராதா: "1996ல் பாஜக தனித்து போட்டியிட்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு மேல் நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று மூத்த தலைவர் பொன்.ராதா சொல்கிறார். பாஜக தனித்து போட்டியிடுவது ஒன்றும் புதிதல்ல என்று கேசவ விநாயகமும் சொல்கிறார்.

தனித்து போட்டியிடவும் தயாராகுங்கள் என்று நேற்றுகூட, அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். தேசிய தலைவரே இப்படி சொல்லியிருப்பதால், கிட்டத்தட்ட பாஜக தனித்து போட்டியிடும் முடிவை நோக்கியே செல்வதாக தெரிகிறது.

சந்தோஷ்: நேற்றைய தினம் எம்பி தேர்தல் பணி தொடர்பாக மாநில நிர்வாகிகளிடம் சந்தோஷ் பேசும்போது, கூட்டணியை பற்றி நீங்கள் யாரும் சிந்திக்க வேண்டாம்.. அதை கட்சி அதை கட்சி மேலிடம் பார்த்துக்கொள்ளும். கட்சி வளர்ச்சி பணியில் மட்டும், நீங்கள் எல்லாரும் கவனம் செலுத்துங்கள்.. ஒருவேளை, தனித்து போட்டியிடும் சூழல் ஏற்பட்டாலும், அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும்.

இதற்காக, நீலகிரி, கோவை, விருதுநகர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தென்காசி, தென் சென்னை, திருநெல்வேலி, ராமநாதபுரம், வேலூர் ஆகிய தொகுதிகளில், தேர்தல் அலுவலகங்களை விரைந்து துவக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை உறுதி: மூத்த தலைவர் சந்தோஷ் கூறியிருக்கும் இதே தொகுதிகளைத்தான் மாநில தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார்.. செய்தியாளர்களிடம் பேசும்போது, "பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழக பாஜக மிகவும் தெளிவாக இருக்கிறது. 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதில், 9 தொகுதிகள் மீது தனி கவனம் செலுத்த இருக்கிறோம். கட்சியின் கட்டமைப்பை மேலும் வலிமைப்படுத்த போகிறோம்" என்றார்.

கடந்த வருடம் தமிழக பாஜக சார்பில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது.. அதன்படி, தமிழகத்தின் அனைத்து தொகுதிகளுக்கும், டீமை களமிறக்கி, பலம்வாய்ந்த தொகுதிகள் எவை என்பது குறித்த லிஸ்ட் எடுக்கப்பட்டது. அந்த ரிப்போர்டினை மேலிடத்துக்கும் அனுப்பி வைத்திருந்தது.. அந்த லிஸ்ட்டில் பதிவான மேற்கண்ட 9 தொகுதிகளுமே பதிவாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த ஒருவருட காலமாகவே, இந்த தொகுதிகளில் பாஜக களப்பணிகள் தீவிரமாகி வந்தது. இதை அடிப்படையாக வைத்தே டெல்லி தலைவர்களின் தமிழகம் வருகையும் அமைந்துவந்தது.. சமீபத்தில், 9ஆண்டு பாஜக சாதனை விளக்க கூட்டத்துக்காக, உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்தபோது, முதலில் அவர் நடத்திய கூட்டம் தென்சென்னையில்தான்.. பிறகு வேலூர் தொகுதிக்கும் சென்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
அதிமுக செக்: தேர்தல் நெருங்கும் சூழலில், சம்பந்தப்பட்ட 9 தொகுதிகளிலும் பாஜகவின் களப்பணி மேலும் அதிகமாகும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்ல, தனித்து போட்டி என்ற தளத்தையும் நோக்கி செல்வதாக தெரிகிறது. காரணம், கடந்த வருடம் பாஜக கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போதே, "தனித்து போட்டியிடுவோம், அப்போதுதான் நமது பலம் தெரியும், கிளி கூண்டைவிட்டு பறக்க தயாராகிவிட்டது" என்று கூறியிருந்ததையும் நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

அதேசமயம், பாஜக டார்கெட் செய்துள்ள இந்த 9 இடங்களிலுமே திமுக, அதிமுகவும் வலுவாக உள்ளன.. எனவே, பாஜகவை வீழ்த்துவதற்கான வேலைகளில் அதிமுக தரப்பு இறங்கிவிட்டதாக தெரிகிறது. அந்தவகையில், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, கரூர் உள்ளிட்ட தொகுதிகளில் எப்படியும் பாஜக போட்டியிடக்கூடும் என்பதால், இந்த தொகுதிகளிலெல்லாம் அதிமுகவின் குறி விழுந்திருக்கிறதாம்.
மேலிட பாஜக: சுருக்கமாக சொல்லப்போனால், மாநில தலைமைக்கு அண்ணாமலை பொறுப்பேற்றபிறகு, பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்டது என்பதை மேலிட பாஜகவுக்கு நிரூபிக்க வேண்டும் + வாக்கு சதவீதம் அதிமுகவுக்கு எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்ற டபுள் டார்கெட்டை கையில் எடுத்துள்ளதாம் அதிமுக.

அதுமட்டுமல்ல, அண்ணாமலை, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த முறை, அதீத முயற்சி எடுத்து பாஜகவை அதிமுக வீழ்த்தும் என்றும் சொல்கிறார்கள்.. இதற்காகவே, சம்பந்தப்பட்ட தொகுதிகளில் மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களை வேட்பாளராக நிறுத்தவும் திட்டமிட்டு வருகிறதாம் அதிமுக.

திமுக + பாஜக: ஆக, கொங்கு உட்பட லிஸ்ட்டில் உள்ள தொகுதிகளை வெல்ல போவது யார் என்பதில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட தொகுதிகளில், இரு தரப்பிலுமே "தாராளங்கள்" கரைபுரண்டோடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+