மிரட்டும் 'கொரோனா BF7'.. மறுபடியும் மொதல்ல இருந்தா! வருகிறதா புதிய தடுப்பூசி? நிபுணர்கள் கருத்தென்ன?
சென்னை : கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் உலகத்தையே உலுக்கி போட்ட கொரோனாவின் தாக்கத்திலிருந்து மெல்ல மெல்ல உலக நாடுகள் மீண்டெழுந்து வரும் நிலையில் மீண்டும் அச்சுறுத்த தொடங்கி இருக்கிறது கொரோனா பிஎஃப் 7. ஏற்கனவே பொதுமக்கள் பலருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கும் நிலையில் இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்குமா? அல்லது மேலும் ஒரு தடுப்பூசி தேவைப்படுமா என்பது விவாதமாக எழுந்திருக்கிறது.
2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு படிப்படியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பையும், உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது.
சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் இரண்டாவது அலை, மூன்றாவது அலை என தனது ஆட்டத்தை காட்டத் தொடங்கிய கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதளபாதாளத்தை நோக்கிச் சென்றது.

கொரோனா
இந்நிலையில் தற்போது கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது. சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆன்லைனில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் மாநில அரசுகள் எதற்கும் தயாராக இருக்குமாறும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவமனைகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

மீண்டும் அச்சம்
சீனாவில் கோடிக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில் சடலங்களை புதைக்க வழி இல்லாமல் அந்நாட்டு மக்கள் தவித்து வருவதாக ஊடகங்கள் செய்து வெளியிட்டு வருகின்றன. இந்தியா போன்ற பெரும் நாடுகளில் தடுப்பூசி திட்டம் ஊக்குவிக்கப்பட்டு முதல் டோஸ் இரண்டு டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் என மூன்று தடுப்பூசிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிராக இதுவரை பயன்படுத்திய தடுப்பூசிகள் பலனளிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தடுப்பூசிகள்
உலகளவில் ஃபைசர், கோவாக்சின், கோவிஷில்ட், ஸ்புட்னிக், கோவோவாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது உருவாகி இருக்கும் புதிய வைரஸ் கொரோனா தடுப்பூசிகளை சமாளிக்குமா என்பது விவாதமாக மாறி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து பிரபல வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா வாழ் தமிழரான கார் முத்துமணி பிபிசி செய்து நிறுவனத்திடம் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்திருக்கிறார்.

நிபுணர்கள் சொல்வதென்ன?
அதில் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. ஆனால் சீனாவில் பிற நாடுகளின் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படவில்லை. அவர்கள் உருவாக்கிய தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டதா என்பது கேள்வியாகவே இருக்கிறது. தற்போது சீனாவில் இருந்து பலர் பல உலக நாடுகளுக்கு பயணித்திருப்பதால் இந்த புதிய வைரஸ் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது. நான்காவது தடுப்பூசி தேவையா இல்லையா என்பதை உறுதியாக சொல்ல இயலவில்லை. அதே நேரத்தில் புதிதாக தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் புதிய கொரோனா வைரஸை தடுக்கும் என்பதையும் உறுதியாக கூற முடியாது. தடுப்பூசிகளால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகுமே தவிர முழுமையாக கொரோனாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியாது.

மரபணு பிறழ்வு
பொதுவாக கொரோனா வைரஸ் எப்படியாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற அளவிலேயே இருக்கும் எத்தனை தடுப்பூசிகள் இருந்தாலும் உடனடியாக மரபணு பிறழ்வு மூலம் புதிய வகை கொரோனாவாக உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை சுமார் 15 உருமாற்றங்களை கொரோனா அடைந்திருக்கிறது. தற்போது புதிய வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் அது அடுத்தடுத்து பிறழ்வுகளை சந்திக்கும் என்பதால் தடுப்பூசி கண்டறிவதற்கும் ஒரு கால இடைவெளி ஏற்படும். அதனால் தடுப்பூசி என்றுமே தீர்வாகாது. கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வது, முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளி ஆகியவை மட்டுமே கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள பலன் அளிக்கும் எனக் கூறியிருக்கிறார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications