சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு கடந்து வந்த பாதை - தற்கொலை முதல் சிபிஐ விசாரணை வரை

Google Oneindia Tamil News

சென்னை : அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த போது தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் வழக்கு கடந்து வந்த பாதையைப் பார்க்கலாம்

அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த பள்ளிக்கூடத்தின் அருகிலேயே உள்ள விடுதியில் அவர் தங்கியிருந்தார்.

Ariyalur Student Suicide Case Transfered to CBI Says Chennai High Court Madurai Bench

கடந்த ஜனவரி 9ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில், 19ஆம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கைதான் தற்போது சிபிஐக்கு மாற்றியுள்ளது மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கு தற்கொலை முயற்சி முதல் சிபிஐ விசாரணை வரை இந்த வழக்கு கடந்த வந்த பாதையை தற்போது பார்க்கலாம்

ஜனவரி 9 - தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி விடுதியில் வார்டன் தன்னை வேலைகள் கொடுத்து டார்ச்சர் செய்வதாகவும், வீட்டுக்கு அனுப்பாமல் கொடுமைப் படுத்துவதாக பூச்சி மருந்தை குடித்துள்ளார்.

ஜனவரி 19 - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஜனவை 20 - தன்னை மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வற்புறுத்தியதாகவும் இதன் காரணமாகவே தான் தற்கொலைக்கு முயன்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியான நிலையில், அந்த வீடியோவை பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்ட பக்கத்தில் வெளியிட்டார் இது பெரும் சர்ச்சையானது.

ஜனவரி 20 - பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக எந்த ஆதாரமும் இல்லை எனவும், மாதிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்திலும் மாணவி எந்த இடத்திலும் மதமாற்றம் என்ற வார்த்தையை கூறவில்லை எனவும், மாணவி குறித்த அடையாளங்களை வெளியிடுவது குற்றம் எனவும், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மாவட்ட காவல்கண்காணிப்பாளரான ரவளிபிரியா ஐஏஎஸ் பேட்டியளித்தார்.

ஜனவரி 21 - மாணவியின் மரணம் தொடர்பாக 62 வயதான விடுதி கண்காணிப்பாளரான சகாய மேரி கடந்த ஜனவைரி 21ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

ஜனவரி 22- மாணவி லாவண்யா மதமாற்றம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது மரணத்திற்கு நீதி கேட்டு பாஜக இளைஞரணி சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் மாநில இளைஞரணி தலைவர் வினோத் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது

ஜனவரி 23 - மாணவி மரணத்திற்குப் பிறகு பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டு மாணவி தற்கொலையில் மதமாற்றம் இல்லை என விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மறு உடல் கூராய்வு நடத்தத் தேவையில்லை என்று மதுரை உயர் நீதிமன்றம் கூறியதையடுத்து, இதனை ஏற்றுக் கொண்டு லாவண்யாவின் பெற்றோர் அவரது உடலைப்பெற்று தகனம் செய்தனர்.

ஜனவரி 24 - மாணவியின் மரணத்தில் மதமாற்றம் இல்லை எனவும், பாஜக திட்டமிட்டு இவ்விவகாரத்தில் அரசியல் செய்வதாக திமுக அமைச்சர்கள், தொடர்ந்து பதில் கொடுத்து வந்தனர்.

ஜனவரி 24 - தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் தந்தை முருகானந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார். அதில் தனது மகளை கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி பள்ளி நிர்வாகத்தினர் கொடுத்த நிர்பந்தத்தால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்ற வேண்டும் என கோரியிருந்தார்.

ஜனவரி 25 - மதமாற்றம் செய்ய முயற்சித்து தான் பள்ளி மாணவியின் தற்கொலைக்கு காரணம் எனவும், அவருக்கு நீதி கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. (இந்த போராட்டத்தில் நயினார் நாகேந்திரன் அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது வேறு கதை

ஜனவரி 25 - மாணவி பேசியதாக வீடியோவை பதிவு செய்த முத்துவேல் வல்லம் முகாம் அலுவலகத்தில் டிஎஸ்பி பிருந்தா முன்பு ஆஜராகி, வீடியோ எடுத்த செல்போனை ஒப்படைத்தார். மேலும் மாணவியின் பெற்றோரும் ஆஜராகினர்.

ஜனவரி 27 - மதமாற்றம் செய்ததால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பாஜக தேசியத் தலைமை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது

ஜனவரி 27 - மாணவி மரணத்திற்கு முன்பாக பேசியதாக புதிய வீடியோ வெளியானது. அதில் விடுதி காப்பாளர் தன்னை துன்புறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டதாக மாணவி பேசியிருந்தார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஜனவரி 28 - மாணவி தற்கொலையில் மத மாற்றம் இல்லை எனவும், ஊருக்குள் சிலர் வந்து மாணவி மதமாற்றம் செய்ததால் தான் தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறுமாறு சிலர் கூறுவதாகவும் இதுவரை மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மைக்கேல் பட்டி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

Ariyalur Student Suicide Case Transfered to CBI Says Chennai High Court Madurai Bench

ஜனவரி 28 - தஞ்சாவூர் பள்ளியில் மதமாற்றம் நடக்கவில்லை எனவும், மாணவி தற்கொலை சம்பவத்தை வைத்து தமிழகத்தில் பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ஜனவரி 30 - பாஜம மாநில தலைவர் அண்ணாமலை பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவரது பெற்றோருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியளித்தார்.

Ariyalur Student Suicide Case Transfered to CBI Says Chennai High Court Madurai Bench

ஜனவரி 31 - அரியலூர் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரணையை தொடங்கியது.

Recommended Video

    தஞ்சாவூர்: எங்கள் பள்ளியில் மதமாற்றத்திற்கு இடமே இல்லை…. முன்னாள் மாணவிகள் திட்டவட்டம்!

    ஜனவரி 31 - பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டார்.

    English summary
    The Madurai branch of the Chennai High Court has ordered that the case of a man who committed suicide while studying at a private school in the Tanjore district be transferred to the CBI. In this case, let's look at the path the case has taken
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X