சென்னை மாநகரின் புதிய போலீஸ் கமிஷனர் அருண் ஐபிஎஸ்.. சட்டம் ஒழுங்கில் தான் ஸ்பெஷலிஸ்ட்டே! யார் இவர்?
சென்னை: சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அருண், சென்னை பெருநகர காவல்துறையின் 110வது கமிஷனர் ஆகியுள்ளார். இவரை பற்றி பார்க்கலாம்.
சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக ஏ.அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த புகார்கள் அதிகரித்த நிலையில், அதிரடியாக இந்த மாற்றம் நடந்துள்ளது.

அருண் ஐபிஎஸ்: தமிழ்நாட்டில் திமுக, அதிமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி, அருணுக்கு பவர்ஃபுல் போஸ்டிங் கிடைக்கும். அதற்கு காரணம், அவரது சிறப்பான செயல்பாடு. காவல்துறையில் சட்டம் ஒழுங்காக இருந்தாலும், குற்ற புலனாய்வாக இருந்தாலும், போக்குவரத்து துறையில் இருந்தாலும் அதிரடிக்கு பெயர்போன ஐபிஎஸ் அதிகாரி அருண்.
1998 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி அருண். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்துள்ளார்.
யார் இந்த அருண்?: ஐபிஎஸ் பயிற்சி முடித்த பிறகு நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக (ஏஎஸ்பி) பணியாற்றினார். பின்னர் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்பி) பணியாற்றினார் அருண். சட்டம் ஒழுங்கிற்கு அருண் கொடுத்த முக்கியத்துவமும் குற்றங்களை குறைக்க அருண் எடுத்த நடவடிக்கைகளும் வெகுவாக பாராட்டப்பட்டது.
பின்னர் சென்னைக்கு வந்த அருண், துணை ஆணையராக சென்னை அண்ணா நகர் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார. மேலும் தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டு காவல்துறை டிஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணை தலைவராக பணியாற்றினார் அருண்.
லாட்டரிக்கு வேட்டு: மேலும் சென்னை மாநகரில் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் - ஒழுங்கு தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 2016 ஆம் ஆண்டு காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார் அருண். தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும் பொறுப்பு வகித்தார்.
2021 ஆம் ஆண்டு மீண்டும் திருச்சி மாநகர காவல் ஆணையராக இரண்டாவது முறையாக பொறுப்பு வகித்தார். திருச்சியில் கொடி கட்டிப் பறந்த லாட்டரி விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அருண், லாட்டரி அதிபர் உள்ளிட்ட கேங்கை கைது செய்தது பாராட்டுகளைப் பெற்றது.
சட்டம் ஒழுங்கு ஸ்பெஷலிஸ்ட்: 2022 ஆம் ஆண்டு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் ஆவடி மாநகர காவல் ஆணையராகவும் பதவி வகித்தார் அருண். இதையடுத்து கடந்த ஆண்டு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றார் அருண்.
தமிழ்நாடு முழுவதும் கிரைம்களை கவனித்தும் போலீசாரின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அருண் ஐபிஎஸ் மேற்கொண்டு வந்தார். பல இடங்களில் நில பிரச்னையில் போலீசார் தலையிட்டு பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் வந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத நிலம் தொடர்பான சிவில் விவகாரங்களில் போலீசார் தலையிட கூடாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார் அருண்.
இந்நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவம், தலைநகரில் சட்டம் ஒழுங்கு பற்றிய கடும் விமர்சனங்களை எழுப்பிய நிலையில் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அருண் ஐபிஎஸ், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
110-வது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்க உள்ளார். தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றிய அருண், புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவரது அதிரடி நடவடிக்கைகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications