அரசு பார்வையாளராக நின்றபோது.. ஆம்புலன்ஸ் கொடுத்த முஸ்லீம் முன்னேற்றக் கழகம்: அருணா ஜெகதீசன் பாராட்டு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மனிதாபிமான மிக்க ஆம்புலன்ஸ் சேவை பாராட்டத்தக்கது என அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
காவல்துறை, வருவாய்த்துறை, அரசு அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டும் நின்ற நேரத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் உதவ முன் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்பதும் அதன் தலைவர் ஜவாஹிருல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது.

அருணா ஜெகதீசன்
கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. அதுமட்டுமல்லால் குண்டடி பட்டும், காவல்துறையினரின் தடியடி பட்டும் ஏராளமானோர் சிகிச்சை பெற்றனர். இதனிடையே பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கொடுத்த அழுத்தம் காரணமாக, துப்பாக்கிச்சூடு நிகழ்வு பற்றி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

தமுமுக சேவை
இந்நிலையில் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை அறிக்கை முறைப்படி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் காவல்துறையினர் மீது கடுமையாக குற்றஞ்சாட்டியுள்ள ஆணையம் மக்களுக்கு தெரியாத பல புதுமையான தகவல்களையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் துப்பாக்கிச் சூடு நிகழ்வின் போது, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்ஸ் சேவையை மனிதாபிமானம் மிக்க செயல் எனக் கூறி பாராட்டியுள்ளது அருணா ஜெகதீசன் ஆணையம்.

உதவ வரவில்லை
பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தப் பக்கம் இருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர் உதவி புரிய முன்வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை, வருவாய்த்துறை, அரசு அதிகாரிகள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே நின்றார்கள் எனவும் அருணா ஜெகதீசன் ஆணையம் ஆனித்தரமாக தெரிவித்துள்ளது.

மமகவின் அங்கம்
மனிதநேய மக்கள் கட்சியின் ஒரு அங்கம் தான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்பதும் அதன் தலைவர் ஜவாஹிருல்லா என்பதும் குறிப்பிடத்தக்கது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது துணிந்து நின்று மனிதாபிமான மிக்க செயலாற்றியதன் மூலம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications