கொள்கை எதிரியுடன் கூட்டணியா.. அந்த முடிவில் விஜய் உறுதியா இருக்காரு.. திட்டவட்டமாக மறுத்த தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் ஒரு போதும் கொள்கை எதிரியான பாஜகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்காது என்று தவெக தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதில்லை என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டுள்ள நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து டிசம்பர் மாதத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகிவிட்ட நிலையில், தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாஜக ஒருபுறம் தங்களுக்கான தொகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஜூலை 7 முதல் 21 வரை சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

As per sources Tamizhaga Vetri Kazhagam Rules Out Alliance with BJP in Tamil Nadu Elections

தவெகவுக்கு அழைப்பு

7 மாவட்டங்களில் 34 சட்டமன்றத் தொகுதிகளில் மக்களையும், அதிமுக நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார். இந்த கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று தொடர்ச்சியாக அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் அழைத்திருக்கின்றனர்.

அமித்ஷாவின் விளக்கம்

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கூட தவெக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் சில காலம் உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள் என்று பதில் அளித்திருந்தார். அதற்கேற்ப தமிழக வெற்றிக் கழகமும் அதிமுகவை விமர்சிப்பதே இல்லை. இதனால் விஜயும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக பேச்சுகள் எழுந்தன.

கொள்கை எதிரி பாஜக

ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட முதல் மாநாட்டிலேயே பாஜகவை தங்களின் கொள்கை எதிரியாக விஜய் அறிவித்தார். இதனால் கொள்கை எதிரியுடன் தவெக கூட்டணி வைக்குமா என்ற கேள்வி அக்கட்சியினர் மத்தியில் விவாதமாகியது. இந்த நிலையில் தவெக தரப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் உறுதி

இதுகுறித்து தவெக தலைமையில் உள்ள நிர்வாகிகளிடம் பேசுகையில், ஒருபோதும் கொள்கை எதிரி உடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக உள்ளது. எக்காரணத்தை கொண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையாது. அதில் தவெக தலைவர் விஜய் உறுதியாக இருக்கிறார்.

கூட்டணி பேச்சுவார்த்தை எப்போது?

அதேபோல் தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இந்த ஆண்டு இறுதியில் தான் தொடங்கும். அப்போது தவெக நிர்வாகிகளுடன் ஆலோசித்து விஜய் முடிவு எடுப்பார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் சட்டமன்றத் தேர்தலில் தவெக தனித்தே களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+