சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அதே பிளான்.." 2ஆம் அலைக்கு கைகொடுத்தது இப்போது உதவுமா? சென்னைக்கு ககன்தீப் சிங் பேடி அதிரடி ஆக்ஷன்

Google Oneindia Tamil News

சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சத்திற்குச் செல்ல தொடங்கியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி மே மாதம் அமல்படுத்திய அதே திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தைக் கூட கடந்தது. இதையடுத்து அப்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

அதன் பின்னே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரத் தொடங்கியது. அதற்கேற்ப ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

 இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் அதே நிலைதான்.. மீண்டும் தாண்டவமாடும் கொரோனா.. டேட்டா கூறுவது என்ன இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் அதே நிலைதான்.. மீண்டும் தாண்டவமாடும் கொரோனா.. டேட்டா கூறுவது என்ன

 5 மாநிலங்கள்

5 மாநிலங்கள்

இந்த ஒரு சூழலில் கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் பாதிப்பு காரணமாக உலகெங்கும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அதேநிலை தான். குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு மோசமாக உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 தலைநகர் சென்னை

தலைநகர் சென்னை

தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் மொத்தம் 23,989 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதமும் 15% தொட்டுள்ளது. குறிப்பாக மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் தலைநகர் சென்னையில் தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 8978 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 2ஆம் அலையை விட மோசம்

2ஆம் அலையை விட மோசம்

தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மாநிலத்தில் மொத்தம் 23,989 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் பாசிட்டிவ் விகிதமும் 15% தொட்டுள்ளது. குறிப்பாக மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் தலைநகர் சென்னையில் தான் நிலைமை மிக மோசமாக உள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 8978 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 மருத்துவ கட்டமைப்பு

மருத்துவ கட்டமைப்பு

அதேபோல பாசிட்டிவ் விகிதமும் குறிப்பாக பாசிட்டிவ் விகிதம் அச்சமூட்டும் அளவுக்கு 28.6ஐ எட்டியுள்ளது. அதாவது பரிசோதனை செய்யப்படும் நான்கில் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதுவும் கூட 2ஆம் அலையைக் காட்டிலும் அதிகம். நல்வாய்ப்பாக கட்டுங்கடாமல் செல்லவில்லை. இருப்பினும், இதே நிலை எவ்வளவு நாள் தொடரும் என்பது நமக்குத் தெரியவில்லை. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தால் மருத்துவ கட்டமைப்புக்கு பெரும் அழுத்தம் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

 முக்கிய பிரச்சினை

முக்கிய பிரச்சினை

இதைச் சமாளிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சளி, உடல் சோர்வு, காய்ச்சல் உள்ளிட்டவை இருப்பவர்கள் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், சோதனை முடிவுகள் வர 2 முதல் 3 நாட்கள் வரை ஆவதால், அதற்குள் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் பரவல் ஏற்படும் ஆபத்து ஏற்படுகிறது.

 உத்தரவு

உத்தரவு

இந்நிலையில், இதையும் தடுக்க சென்னை மாநகராட்சி மீண்டும் ஒரு திட்டத்தை அமல்படுத்தப்படவுள்ளது, அதன்படி இனி கொரோனா பரிசோதனை செய்ய வரும் நபர்களுக்கு அறிகுறி இருந்தாலேயே அவர்கள் மருத்துவ தொகுப்பை உள்ளடக்கிய கிட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆரம்பச் சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வரும் நபர்களுக்கு இந்த கிட் வழங்கப்படும்.

 கொரோனா கிட்

கொரோனா கிட்

அந்த கொரோனா கிட்டில் வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டமால் மாத்திரைகள், கபசுர குடிநீர், 3 அடுக்கு மாஸ்க் உள்ளிட்டவை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்து கொள்வோர் அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவர்கள் பயன்படுத்திக் கொள்ள இந்த கொரோனா கிட் உதவியாக இருக்கும்.

 அதே பிளான்

அதே பிளான்

சென்னை மாநகராட்சி சார்பில் இதுபோன்ற திட்டங்கள் அமல்படுத்துவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே 2ஆம் அலை உச்சத்தில் இருந்த சமயத்தில் கடந்த மே மாதம், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இதே உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இதேபோல சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பின்னரே அப்போது 2ஆம் அலை விரைவாகச் சென்னையில் கட்டுக்குள் வந்தது.

 ககன்தீப் சிங் பேடி

ககன்தீப் சிங் பேடி

இப்போது ஆணையர் ககன்தீப் சிங் பேடி மீண்டும் அதே உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். ஏற்கனவே, தனிமையில் உள்ள நோயாளிகளின் விபரங்களைத் தனியார் மருத்துவமனைகள் சென்னை மாநகராட்சிக்கு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தலைநகர் சென்னையில் மிக விரைவில் 3ஆம் அலையும் கட்டுக்குள் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Steps taken by Chennai corporation to curb Corona spread in Chennai. Gagangeep Singh Bedi's latest plan to stop corona in chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X