சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுமட்டும் நடந்தா அவ்வளவுதான்.. கேம் ஓவர்.. பாகிஸ்தான் மேட்சில் இந்தியாவிற்கு 5 சவால்கள்.. என்னென்ன?

Google Oneindia Tamil News

சென்னை: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 5 முக்கியமான சவால்கள் உள்ளன.

ஆசிய கோப்பை 2022 தொடரில் இன்று மிக முக்கியமான ஆட்டம். சூப்பர் 4 அணி குழுவிற்கு தேர்வாகி உள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளன.

குழு ஆட்டத்தில் முதல் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முழு வேகத்துடன் இன்று களமிறங்கும்.

இரண்டு அணிகளும் மோதும் ஆட்டம் துபாயில் இன்று மாலை 7.30 மணிக்கு நடக்க உள்ளது.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.. வெற்றி அடையாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.. வெற்றி அடையாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்

சவால் 1 - பவுலிங்

சவால் 1 - பவுலிங்

கடந்த முறை பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகளை எடுத்தது. ஆனால் போட்டியில் சாஹல் சரியால் பவுலிங் செய்யவில்லை. பின்னர் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பவுலிங் மோசமாக இருந்தது. ஆவேஷ் கான், சாஹல் உள்ளிட்டோர் சரியாக பவுலிங் செய்யவில்லை. இந்த முறை இந்திய அணியின் பவுலிங் மாற்றம் பெற வேண்டும். இல்லையென்றால் பாகிஸ்தானை சமாளிப்பது கடினம். பவுலிங் இந்த போட்டியில் சொதப்பினால் இந்தியாவின் ஆட்டம் க்ளோஸ் என்றுதான் சொல்ல வேண்டும்!

சவால் 2 - ஓப்பனிங்

சவால் 2 - ஓப்பனிங்


இந்திய அணியின் பேட்டிங் நன்றாக இருந்தாலும் ஓப்பனிங் சரியில்லை. கே . எல் ராகுல் இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை. அதேபோல் கோலியும் இன்னும் முழுமையாக பார்மிற்கு வரவில்லை. அதோடு ரோஹித் சர்மாவும் பார்மில் இல்லை. டாப் ஆர்டர் வீரர்கள் 3 பேரும் பார்மில் இல்லாதது இந்திய அணிக்கு சிக்கலாக உள்ளது. கடந்த முறையும் டாப் ஆர்டர் சரியாக ஆடவில்லை. அதனால் இன்றைய ஆட்டத்தில் டாப் ஆர்டர் ஜொலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சவால் 3 - பாகிஸ்தான் பவுலிங்

சவால் 3 - பாகிஸ்தான் பவுலிங்

அதேபோல் பாகிஸ்தான் பவுலிங் மீண்டும் முழு பார்மிற்கு திரும்பி உள்ளது. நஸீம் ஷா காயத்தில் இருந்து மீண்டு விட்டார். இதனால் அவர் இன்று ஆட வாய்ப்பு உள்ளது. இவரின் பவுலிங்கை சமாளிக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு உள்ளது. முக்கியமாக துபாய் பிட்சை பாகிஸ்தான் கடந்த முறை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டது. வேகமாக ஸ்விங் பந்துகளை போடும் பாகிஸ்தான் பவுலர்களை சமாளிக்க வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

 சவால் 4 - அணி தேர்வு

சவால் 4 - அணி தேர்வு

ஜடேஜா இன்றைய தொடரில் காயம் காரணமாக ஆட மாட்டார். இன்று பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா யாரை அணியில் தேர்வு செய்வார் என்ற கேள்வி இதனால் எழுந்துள்ளது. ஜடேஜாவின் இடத்தை நிரப்ப போகும் அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது அதனால் இன்று இந்திய அணியில் ரோஹித், கே. எல் ராகுல், கோலி, சூர்யா குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அஸ்வின் / பண்ட், புவனேஷ்வர் குமார், சாஹல், அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் இன்று இந்திய அணியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் வாய்ப்புகள் உள்ளன. சமயத்தில் தீபக் ஹூடாவும் ஆட வாய்ப்பு உள்ளது. இவர் நன்றாக பவுலிங்கும் செய்வார்.

சவால் 5 - டாஸ்

சவால் 5 - டாஸ்

இன்றைய போட்டியில் டாஸ் வெல்ல வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ளது. துபாயில் பொதுவாக சேஸிங் செய்யும் அணியே வெற்றிபெற வாய்ப்புள்ளது. துபாய் பிட்சில் இரண்டாவது இன்னிங்சில் அப்படியே ஆட்டம் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக மாறும். இதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்று டாஸ் வெல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. டாஸ் வெல்லாத பட்சத்தில் இந்திய அணி 180க்கு மேல் எடுக்க வேண்டும்.

English summary
Asia Cup 2022 IND vs PAK: What are the 5 challanges for India against Pakistan?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X