Exclusive: என்னை தேடி வந்தால் நடிகர் சிம்புவுக்கு நல்லது நடக்கும்!.. ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா
சென்னை: நடிகர் சிம்பு என்னை வந்து பார்த்தால்தான் திருமணம் நடக்கும். அவருடைய குடும்ப ரகசியத்தை அவர் தெரிந்து கொள்ள வேண்டும் என ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா தெரிவித்தார்.
Recommended Video
ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா- இவரது இயற்பெயர் ஜெயலட்சுமி. 50 வயதாகும் இவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜகுடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே ஆன்மீகத்தில் நாட்டம் இருந்ததால் அவர் 5 மகா குருக்களிடம் தீட்சை பெற்றார்.
அவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு பேட்டி கேள்வி பதில் வடிவில்:

கே: எப்படி இருக்கிறீர்கள்?
ப: பிரபஞ்சத்தில் இந்த பூத உடலை கொண்டு எவ்வளவு சேவை ஆற்ற வேண்டும் என இறைவன் நினைத்திருக்கிறானோ அது வரை நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.
கே: கொரோனா சமயத்தில் இந்த கருங்காலி குச்சி உங்களுக்கு எந்த விதத்தில் உதவியது?
ப: கொரோனா காலத்தில் நான் கயிலாயத்தில் இருந்தேன். அங்கு நதிகள் எல்லாம் ஓடும். எனக்கு அமாவாசை, பவுர்ணமி மிக முக்கியமான நாட்கள். அந்த நாட்களில் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க மாட்டேன். தவத்தில் உட்காருவேன். காடு, நதி, கடல் சார்ந்த பகுதிகளில் தவத்தில் உட்கார்ந்திருப்பேன். அப்போது நிறைய ஆபத்துகள் இருக்கின்றன. நாய்கள் சண்டையிட்டு கொண்டு வரும். அப்போது இந்த கருங்காலி குச்சி மூலம் மந்திரத்தை சொல்லி என்னை சுற்றி நான் வளையம் போட்டுக் கொள்வேன். அப்போது நாய் என்ன சண்டை போட்டுட்டு வந்தாலும் எல்லைக் கோட்டை தாண்டாது. ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது என்னுடைய உடம்பிற்கு என்ன ஆகும் என எனக்கே தெரியாது. அப்போது எனது பாதுகாப்புக்கு இந்த வளையத்தில் போட்டிருப்பேன். தெருவில் கிடக்கும் கல்லில் கூட சக்தி இருக்கும். ஆனால் எல்லா கருங்காலி குச்சிகளுக்கும் சக்தி இருக்காது. இந்த குச்சி என்னிடம் வந்ததால் எனக்கு சக்தி வந்தது என சொல்ல முடியாது. இது நான் செய்த பாக்கியம்.

கே: கோபம் வரும் மாதிரி யாராவது கேள்வி கேட்டால் நீங்கள் யாருக்காவது சாபம் விட்டுள்ளீர்களா?
ப: என்னை நிறைய பேர் டிரோல் செய்துள்ளார்கள். நானே நிறைய பேருக்கு பேட்டி வீடியோக்களை அனுப்புவேன். இதை பார்த்து சிரிங்கனு சொல்வேன். எனக்கு வலிகளே தெரியாது. தாயுடைய தன்மையே தெரியாமல் பிள்ளை கல்லை விட்டு எறிந்தால் தாயின் தன்மை குறைந்துவிடாது.
கே: சிம்புவுக்கு எப்போது திருமணமாகும்?
ப: கடந்த முறை என்னிடம் பேட்டி எடுத்த போதே நான் சொன்னேன், அவர் தோஷ நிவர்த்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கு ஒரு ரகசியம் இருக்கும். அது போல் சிம்பு குடும்பத்திற்கும் இருக்கிறது. அதை அவர் வந்து என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
கே: திரிஷா, அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட பலர் திருமணமாகமலேயே இருக்கிறார்கள்?
ப: நான் பொதுவாக சொல்கிறேன். அவர்கள் எல்லாம் அன்புக்கு ஏங்குபவர்கள். பணத்திற்கு வரவில்லை. ஒரு காலகட்டத்தில் தொழில் இல்லாததால் நடிப்பு தொழிலில் தள்ளப்பட்டிருப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களுக்கு ஆர்வம் அதிகமாகும். ஆனால் போக போக அவர்களுக்கு கசப்பு தன்மை தட்டும். அந்த நேரத்தில் அவர்களுக்கு அன்பு தேவை. அப்போது ஒரு துணையை தேர்வு செய்கிறார்கள். அந்த துணை துரோகம் செய்யும் போது அவர்களுக்கு வலி ஏற்படும். அவர்களிடம் இருக்கும் பணத்திற்கும் அழகிற்கும் எப்படிப்பட்ட மன்மதனையும் திருமணம் செய்யலாம். ஆனால் அவர்கள் செய்ய மாட்டார்கள். இதனால் வேதனையில் அவர்கள் போலியான நடிப்பை காட்டுவார்கள். அவர்களுக்கு இருக்கும் நல்ல மனசு வேறு யாருக்கும் இருக்காது.

கே: திரிஷா, அனுஷ்கா, நயன்தாரா, தமன்னாவில் யாரை உங்களுக்கு பிடிக்கும்?
ப: இவர்கள் எல்லாம் எனக்கு நடிகைகளாக தெரியவில்லை. இந்த 4 பேரில் அனுஷ்கா என்பவர் பாசத்திற்கு ஏங்குபவர். இவர்கள் எல்லாம் நல்ல பெண்கள். தெய்வ பெண்கள்தான்.
கே: கொரோனா 3ஆவது அலை வர போகிறது என்கிறார்கள். உங்களை நாடி வருபவர்களுக்கு எலுமிச்சை பழம் தருகிறீர்கள், கருங்காலி குச்சியை வைத்து ஏதோ செய்கிறீர்கள். என்ன மாதிரியான மாற்றங்கள் அவர்களுக்கு தெரிந்துள்ளது?
ப: கடந்த முறை நீங்கள் பேட்டி எடுக்க என்னை பார்க்க வந்தீர்கள். அப்போது இதே வீட்டில்தான் இருந்தேன். இந்த வீட்டிற்கு வாடகை கூட தரவில்லை. ரூ 1 லட்சத்திற்கு மேல் இருந்தது. ஆனால் எனக்கு ஒரு கோடி மதிப்பிலான சொத்து வந்தது. தேவையில்லாமல் பணத்தை குவிப்பதால் எந்தவித பலனும் இல்லை. உங்கள் இதயத்தில் இந்த தாய்க்கு இடம் கொடுத்தால் போதும்.
கே: இந்த எலுமிச்சை பழத்தை எலி மிச்சம் வச்ச பழம் என்றும் இதை பார்த்தவுடன் இதயத்தில் இருந்து எழும் இச்சைதான் எலுமிச்சை என்றும் கூறுகிறார்கள். உங்களுக்கு இந்த பழம் எப்படி தெரிகிறது?
ப: இந்த பழத்தை ராஜகனி என சொல்வார்கள். ஒருவருக்கு தோஷ நிவர்த்திக்காக எருமை மாட்டை பலி கொடுக்க வேண்டும் என சொன்னால் அதற்கு பதில் பூசணிக்காயை பலி கொடுக்க வேண்டும். இரண்டும் ஒன்றுதான். அது போல் வீட்டில் பில்லி, சூனியம், தோஷம் இவையெல்லாம் நீங்க முனிவர்கள் முதல் கோடானு கோடி தேவர்கள் வரை இந்த ராஜகனியைத்தான் பயன்படுத்துகிறார்கள். இதை வைத்து ஒருவரை வசியப்படுத்தலாம். சாமியை கட்டி போடலாம். ஒரு குடும்பத்தை அழிக்க, ஒரு குடும்பத்தை காப்பாற்றவும் பயன்படுத்தலாம். இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் இது.

கே: இந்த எலுமிச்சையை நீங்கள் யாரிடம் கொடுத்து என்ன மாற்றங்கள் நிகழ்ந்தது?
ப: எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் இருந்த எம்ஜிஆர் நம்பி என்பவர் என்னை பார்க்க வந்தார். இருவருடனும் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் நிறைய உள்ளது. அப்படிப்பட்ட மனிதர் டோக்கன் பெற்று கொண்டு என்னிடம் வந்தார். அவருக்கு சனியின் பாதிப்பால் உயிர் கண்டம் இருந்தது. வண்டியில் அடிப்பட்டு அன்றைய தினம் அவர் சாக வேண்டியவர். கோடிக்கணக்கில் சொத்து இருக்கும் இவர் பெண்ணின் சாபத்தால் நன்றாக இல்லை. ஜெயலலிதாவின் ஆவி அவரது காரில் போனது என நான் அவரிடம் சொன்னேன். அந்த அம்மாவின் அசரிரீயையும் அவர் கேட்டார். அவர் பிறகு மீடியாவில் பேட்டி கொடுத்தார். நான் இருட்டுக்குள் நிறைய வேலைகளை செய்வேன். மற்றவர்கள் மாதிரி திருநீறு எடுத்து கொடுப்பது, லிங்கம் வரவழைப்பது போன்ற வேலைகளை நான் செய்யமாட்டேன்.
கே: ஆன்மீக கருத்துகளை சொல்லும் நித்தியானந்தா, சிவசங்கர் பாபா ஆகியோரில் உங்களுக்கு யாரை பிடிக்கும்?
ப: எனக்கு இவங்க பிடிக்கும், அவங்க பிடிக்கும்னு கிடையாது. மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களை எனக்கு பிடிக்கும். மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சக்தி இருக்கலாம். ஆனால் அதை மக்களுக்கு பயனுள்ளதாக்க வேண்டும்.
கே: ஆன்மீக கருத்துகளை சொல்பவர்கள் பாலியல் வழக்குகளில் மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ப: எந்த ஒரு பதவிக்கு சென்றாலும் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆன்மீகத்திற்கு செல்லும்போது அனைத்து உணர்வுகளையும் துண்டித்துவிட்டு செல்ல வேண்டும். இவர்களிடம் மக்கள்தான் பணத்தை கொட்டுகிறார்கள். கூடவே பெண்ணை அழைத்து செல்கிறார்கள். அப்படியிருக்கும் போது யார்தான் கை வைக்காமல் இருப்பார்கள்? என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications