சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருடுவதற்கு தனி பயிற்சி.. சரணடைய பட்டதாரிகள்.. அதிர வைக்கும் சென்னை ஏ.டி.எம் கொள்ளையர்கள் பின்புலம்

Google Oneindia Tamil News

சென்னை: தொழில் நுட்பம் வளர வளர அதனை பயன்படுத்தி நல்ல விஷயங்கள் செய்வதை விட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தவறானற்றை செய்யும் செயல்கள் அரங்கேற்றி வருகின்றன.

Recommended Video

    சென்னை ஏடிஎம்மில் சென்சாரை விரல்கள் மூலம் தடை செய்து பணத்தை எப்படி எடுத்தார்கள்.. சிசிடிவி காட்சி

    இந்த வகையில் சமீபத்தில் சென்னையை கலங்கடித்துள்ளது வரிசையான ஏ.டி.எம். கொள்ளை. ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிப்பது மலையேறி போய் விட்டது.

    ஆனால் ஏ.டி.எம் எந்திரத்தை எந்த ஒரு தொந்தரவும் செய்யாமல், ஏன் ஏ.டி.எம் எந்திரத்துக்கே தெரியாமல் கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் வரை கொள்ளையடித்துள்ளனர் வட மாநில கொள்ளையர்கள்.

    தமிழ்நாடு.. ஊரடங்கில் வருகிறது கூடுதல் தளர்வுகள்.. பஸ், ஜவுளி, நகைக்கடை.. இன்னும் என்னென்ன?தமிழ்நாடு.. ஊரடங்கில் வருகிறது கூடுதல் தளர்வுகள்.. பஸ், ஜவுளி, நகைக்கடை.. இன்னும் என்னென்ன?

    நவீன கொள்ளை

    நவீன கொள்ளை

    அதாவது டெபாசிட் மிஷினில் ஏடிஎம் கார்டை போட்டு, பின் நம்பர், வித்ட்ராயல் போன்ற விவரங்களை என்டர் செய்துள்ளனர். பணம் வெளியே வந்ததும் சென்சாரை மறைத்து விட்டனர். பணத்தை கஸ்டமர் எடுக்காவிட்டால் 20 வினாடியில் பணத்தை ஏடிஎம் மீண்டும் உள்ளிழுத்துக்கொள்ளும். சென்சாரை மறைத்து விட்டு பணத்தையும் கொள்ளையர் கையில் பிடித்துக் கொள்கின்றனர். இதனால் பணத்தை திரும்ப உள்ளிழுத்துச் சென்றதைப் போல ஏடிஎம்மில் பதிவாகி விடுகிறது.

     வங்கி அதிகாரிகள் திகைப்பு

    வங்கி அதிகாரிகள் திகைப்பு

    ஆனால் பணம் கொள்ளையர்களின் கைகளில் வந்து விடும். சென்சாரை மறைப்பதால் பணம் எடுக்கப்பட்ட விவரம் பேங்கிங் சிஷ்டத்தில் பதிவாகாது. பணம் எடுத்தவரின் கணக்கிலும் பதிவாகாது. சென்னையின் வேளச்சேரி, விருகம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல பகுதி ஏ.டி.எம்.களில் நடந்த இந்த நவீன கொள்ளையை கண்டு போலீசார் மட்டுமின்றி வங்கி அதிகாரிகளும் திகைத்துதான் போனார்கள்.

    ஒருவர் கைது

    ஒருவர் கைது

    மிகவும் சவால் விடும் வகையில் அமைந்த இந்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக களம் இறங்கினார்கள். கொள்ளையர்கள் ஹரியானா மாநிலத்தில் இருப்பது தெரிய வந்து அங்கே போலீசார் விரைந்து சென்றனர். அங்கே வைத்து அமீர் அர்ஷ் என்ற கொள்ளையனை கைது செய்தனர். அவரை சென்னையில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேவாட் கொள்ளையர்கள்

    மேவாட் கொள்ளையர்கள்

    அதி நவீன ஏ.டி.எம் கொள்ளையை அரங்கேற்றும் மேவாட் கொள்ளையர்கள்தான் சென்னை கொள்ளையிலும் ஈடுபட்டது போலீசாருக்கு தெரியவந்தது. யார் இந்த மேவாட் கொள்ளையர்கள்? என்பதை பற்றி பார்ப்போம். ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவாட் மாவட்டம்தான் இந்த கொள்ளையர்களின் இருப்பிடமாகும். கொள்ளையை அரங்கேற்றுவதற்கு இவர்கள் தனிநெட்வொர்க்கே அமைத்துள்ளனர்.

    தனி பயிற்சி

    தனி பயிற்சி

    எங்கே திருட வேண்டும்? எப்படி திருட வேண்டும்? என்று முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளையை முடிக்கின்றனர். திருடுவதற்காகவே கூடுதல் நபர்களை பணிக்கு சேர்த்து அவர்களுக்கும் கொள்ளை குறித்து பயிற்சி கொடுக்கின்றனர். இவர்கள் வசிக்கும் மேவாட் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் போலீஸ் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. கிட்டத்தட்ட கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் படத்தை போலவே இவர்களின் செயல்பாடு அப்படியே இருக்கிறது.

    வழக்கறிஞர்கள் கூட்டம்

    வழக்கறிஞர்கள் கூட்டம்

    இந்த கும்பலில் ஒருவர் போலீசாரிடம் மாட்டிக் கொண்டால் அவர்களை ஜாமீனில் எடுக்கவே தனி வழக்கறிஞர்கள் கூட்டம் வைத்துள்ளனர். முக்கிய தலைகள் மாட்டாமல் இருக்க போலீசில் சரண் அடைவதற்கு என்றே தனி பட்டாளமும் இவர்களிடம் இருக்கிறது. படித்து வேலை கிடைக்காமல் இருக்கும் பொறியியல் பட்டதாரி வாலிபர்களை தங்களிடம் சேர்த்து கொள்கின்றனர் இந்த கொள்ளையர்கள்.

    கிராமத்துக்கே விருந்து

    கிராமத்துக்கே விருந்து

    வெளிநாடுகளில் நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்களை பார்த்து அதை அப்படியே மாட்டிக் கொள்ளாமல் இந்தியாவில் செய்கின்றனர். கொள்ளை சம்பவம் முடிந்ததும் மேவாட் மாவட்ட கிராமத்துக்கு சென்று ஊருக்கே விருந்து படைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஊர் மக்களே உதவி புரிவதால் மீதமிருக்கும் கொள்ளையர்களை பிடிப்பதில் தமிழ்நாடு போலீசாருக்கு மிகவும் சவாலாக உள்ளது.

    English summary
    The background of the ATM robbers who shook Chennai has shocked the police. The robbers from the northern state have looted nearly Rs 50 lakh without knowing the ATM machine
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X