சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆட்டோ சின்னத்தை தட்டி தூக்கிய விஜய் மக்கள் இயக்கம்..டாப் கியரில் தேர்தல் பணி, உற்சாகத்தில் ரசிகர்கள்

Google Oneindia Tamil News

சென்னை : பிரபல நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படாத நிலையில், மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் ஆட்டோ உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

Recommended Video

    Thalapathy Vijay-யின் முழு நேர அரசியலுக்கு அடித்தளமா? | Oneindia Tamil

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

    வோட்டு போட விஜய் வந்தாரே அதே மாதிரி சைக்கிளில்.. மெர்சல் கெட்டப்பில் மதுரையில் வலம் வந்த ரசிகர்! வோட்டு போட விஜய் வந்தாரே அதே மாதிரி சைக்கிளில்.. மெர்சல் கெட்டப்பில் மதுரையில் வலம் வந்த ரசிகர்!

    தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டா போட்டி நிலவுகிறது.

    தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்

    தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம்

    ஊரக உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் பெற்ற வெற்றியை தற்போது கொண்டாடி வரும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநகராட்சி பேரூராட்சி நகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் காண தயாராகி உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சென்னை மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாநகராட்சிகளிலும், தமிழகம் முழுவதில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் களம் காண்கின்றனர்.

    ஆட்டோ சின்னம்

    ஆட்டோ சின்னம்

    தமிழகத்தில் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்படுவது போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களுக்கும் பொதுச் சின்னத்தில் வழங்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்த தாக கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தை முறைப்படியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவில்லை என்ற காரணத்தால் ஆட்டோ சின்னம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என மாநில தேர்தல் ஆணையம் கூறியதோடு ஆட்டோ சின்னத்தையும் ஒதுக்க மறுத்தது. பொது சின்னம் கிடைத்தால் மக்களிடம் கொண்டு செல்ல சுலபமாக இருக்கும் என நினைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் இந்த அறிவிப்பால் சற்று ஏமாற்றம் அடைந்தனர்.

    சின்னங்கள் ஒதுக்கீடு

    சின்னங்கள் ஒதுக்கீடு

    இருந்தும் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சைகளுக்கு பல்வேறு சின்னங்கள் வழங்கப்படும் நிலையில் ஆட்டோ சின்னம் இருக்கும் என்பதால் ஆங்காங்கே போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆட்டோ சின்னத்தை மக்கள் இயக்கத்திற்கு கேட்குமாறு அந்த இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியிருந்தார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை இன்று வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் இருக்கும் நிலையில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு பொதுவான சின்னங்களை ஒதுக்கும் பணி இன்று நடைபெற்றது. உலக உருண்டை, தண்ணீர் குழாய், பந்து, பேட், உள்ளிட்ட சின்னங்களோடுஆட்டோ சின்னம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட சுயச்சை வேட்பாளர்களுக்கான பட்டியலில் இடம் பெற்று இருந்தது.

    ஆட்டோ கிடைத்தது

    ஆட்டோ கிடைத்தது

    இதையடுத்து விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோ சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் மதுரை 88வது மாநகராட்சி வார்டில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் இருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், மற்ற இடங்களில் உலக உருண்டை டைமண்ட் குடை சாதி உள்ளிட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டதாக நம்மிடம் பேசிய விஜய் மக்கள் இயக்க மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்

    English summary
    While the Auto logo has not been allotted to popular actor Vijay's Vijay makkal iyakkam by the Election Commission, Vijay makkal iyakkam executives have said that auto logo has been allotted in some areas, including Madurai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X