ரேஷன் அட்டைதாரர்களே.. இனி "இவங்களுக்கு" ரேஷனில் எந்த பொருளும் கிடைக்காது.. திடீர்ன்னு நிறுத்திய அரசு
சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வந்துள்ளது.. இது தொடர்பாக விளக்கமும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது, அதாவது, 2020ம் ஆண்டில், வடமாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பலர் இலவச ரேஷன் உணவு பொருட்களை கூட பெற முடியாமல் அவதி அடைந்தனர்...

இதனால் மத்திய அரசு "ஒரே நாடு, ஒரே ரேஷன்" திட்டத்தை அறிமுகப்படுத்தியது.. நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது..
எங்கும் வாங்கலாம்: இந்த ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலமாக இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் எங்கும் பொருட்கள் வாங்கலாம் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது அதன்படி, கிலோ கோதுமை 2 ரூபாய்க்கும், கிலோ அரிசி, 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தையும் 2 நாட்களுக்கு முன்பு அரசு தெளிவுப்படுத்தியிருந்தது.
அதாவது, மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் முதல் துவங்கப்பட உள்ளது. இதற்காக வீடு தோறும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ரேஷன் கடைகள் வாயிலாக விரல் ரேகைப் பதிவு செய்யும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.. எனவே, இதனால், ஒரே ரேஷன் அட்டை திட்டத்திற்கு பயோமெட்ரிக் கருவிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால்தான்,ஒ ரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் தமிழ்நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அறிவிப்பு: கலைஞர் மகளிர் உதவித் தொகைக்கான கணக்கெடுப்பு நிறைவு பெற்றபிறகு, மறுபடியும், ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தமிழக கார்டுதாரர்களும், முகவரிக்கு ஒதுக்கிய கடையில் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கலைஞரின் மகளிர் உதவித்தொகை திட்டப்பணியின் காரணமாக, ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வழங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உதவித்தொகை திட்டத்தில், பயன்பெறும் தகுதி, தகுதி இல்லாத பயனாளிகள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டு உள்ளன. மேலும் இதுகுறித்து அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் பதாகை வைக்கப்பட்டு உள்ளது.
கைரேகை பதிவு: இந்த நிலையில் மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கு பயோ மெட்ரிக் கருவிகள் தேவைப்படுகின்றன. இதனால் ரேஷன் கடைகளில் விரல் கைரேகை பதிவு செய்வதற்கு பயன்படுத்தப்பட்டு வந்த பயோ மெட்ரிக் கருவிகள் குடிமைப்பொருள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து குடிமைப்பொருள் அதிகாரிகள் சொல்லும்போது, "உரிமைத்தொகை திட்டத்திற்கு தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு பயோ மெட்ரிக் கருவி தேவைப்படுவதால், ரேஷன் கடைகளில் இருந்து தற்காலிகமாக வாங்கப்பட்டு உள்ளன. தற்போது பயோ மெட்ரிக் கருவி இல்லாததால் எந்த முகவரியில் கார்டு உள்ளதோ அங்கு தான் பொருட்களை வாங்க முடியும். இதனால் ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்க முடியாது.
வருகிற செப்டம்பர் மாதம் வரை இது நடைமுறையில் இருக்கும். இப்போது ரேஷன் கார்டு எண்ணை எழுதி வைத்து, பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று, ரசீது வழங்கி பொருட்கள் வினியோகம் செய்யும் பழைய நடைமுறை பின்பற்றப்படுகிறது" என்று தெரிவித்துள்ளனர்.
திடீர் அறிவிப்பு: எனினும், இந்த திடீர் அறிவிப்பானது சில சங்கடத்தையும், நடைமுறை சிக்கலையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் சொல்லும்போது, "ரேஷன் கார்டு எந்த அட்ரஸில் இருந்தாலும், ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.. இதனால் வெளியூரில் இருந்து வந்து தங்கி பணிபுரிபவர்கள், வாடகைக்கு வசிக்கும் பொதுமக்கள் ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம் செய்யவில்லை.
கோரிக்கை: ஆனால், இப்போது, பயோ மெட்ரிக் கருவி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதால், வெளியூர் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்க முடியாத சூழல் உள்ளது.. முகவரி மாற்றம் செய்தாலும், சம்பந்தப்பட்ட கடைக்கு மாறுவதற்கு ஒரு மாத காலம் ஆகும் என்கிறார்கள். இதனால் ரேஷன் பொருட்களை வாங்க முடிவதிலிலை.. எனவே இப்போது வசிக்கும் பகுதிலேயே பொருட்கள் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்" என்று கூறி கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications