சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேஜிக் "துடைப்பம்".. பாஜக இரும்பு கோட்டைகளில் "துளையிடும்" ஆம் ஆத்மி.. சீனில் வராமல் போகுமோ காங்கிரஸ்

குஜராத் சட்டமன்ற தேர்தலின் முடிவுகளில் ஆம் ஆத்மி முன்னேறி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: ஒவ்வொரு மாநிலத்திலும், ஆம் ஆத்மி நுழைவதை பாஜகவால் துளியும் பொறுத்து கொள்ள முடியவில்லை.. யானையின் காதில், உள்ளே நுழைந்து குடைந்தெடுத்து, விடாமல் எரிச்சலை கிளப்பி கொண்டிருக்கும் எறும்பை போல, பாஜகவை திணற வைத்து வருகிறது ஆம் ஆத்மி.

தேசிய தேர்தலை பொறுத்தவரை, பாஜக Vs காங்கிரஸ் என்ற நிலைப்பாடு மாறிவிட்டது.. பாஜக Vs ஆம் ஆத்மி என்ற அளவுக்கு களத்தையே அடியோடு மாறி காணப்படுகிறது.

காலம் காலமாகவே காங்கிரஸின் கோட்டை என்றாலும்சரி, பாஜகவின் கோட்டை என்றாலும் சரி, அங்கே மறக்காமலும், மறுக்காமலும் உடனே ஆஜராகி தேர்தலை சந்திக்க துணிந்துவிடுகிறது ஆம் ஆத்மி.

ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய சவால்! எதிர்காலமே இந்த முடிவில் தான் இருக்கு.. இது மட்டும் நடந்தால்..! ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய சவால்! எதிர்காலமே இந்த முடிவில் தான் இருக்கு.. இது மட்டும் நடந்தால்..!

 சாதி மத அரசியல்

சாதி மத அரசியல்

குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி புது வரவுதான்.. ஆனால், தேர்தல் பிரச்சாரங்களிலும், கள வியூகங்களிலும் அப்படியான புதுமுகம் தென்படவில்லை.. மாறாக, "சாதி மத" அரசியலை எடுத்த எடுப்பிலேயே கையில் எடுத்ததே, அக்கட்சியின் பக்குவ அரசியலுக்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.. கடந்த ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற சூரத் மாநகராட்சி தேர்தலை இங்கு நாம் நினைவூட்ட வேண்டி உள்ளது.. மொத்தம் 27 இடங்களில் வெற்றிபெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை ஆம் ஆத்மி பெற்றபோதே, பாஜக உஷார் ஆனது.. ஆனால் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாத காங்கிரஸ் அப்போதுகூட சுதாரிக்கவில்லை என்பது பரிதாபம்.

 எஃகு கோட்டை

எஃகு கோட்டை

ஆக, குஜராத் சட்டசபை தேர்தலில், பாஜக Vs ஆம் ஆத்மி என்ற களத்தை தீர்மானித்தே சூரத் மாநகராட்சி தேர்தல் என்பதை அடித்து சொல்லலாம்.. கால் நூற்றாண்டாக ஆண்டு கொண்டிருக்கும் தங்களின் சாம்ராஜ்ஜியத்துக்குள் ஆம் ஆத்மி நுழைகிறதே என்ற கடுப்பும், எரிச்சலும் பாஜகவுக்கு அபரிமிதமாகவே இருந்தது.. அதனால்தான், மோடியின் பிரச்சார நெடிகளில் அதிகம் வறுபட்டது காங்கிரஸைவிட, ஆம் ஆத்மியாகவே இருந்துள்ளது.. புது புது தோற்றத்துடன் "அர்பன் நக்சல்கள்" நுழைய முயற்சிக்கிறார்கள் என்று நேரடியாகவே அட்டாக் செய்தார் மோடி.. துடிப்புமிகு இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள், அதை நாம் அனுமதிக்கக் கூடாது என்று மறைமுகமாக ஆம் ஆத்மி குடைந்தெடுத்தார் மோடி.

டேமேஜ்

டேமேஜ்

பாஜகவுக்கு குறி ஆம் ஆத்மிதான் என்பதை கெஜ்ரிவால் அறியாமல் இல்லை.. இலவசங்களாலேயே பாஜகவை திருப்பியடித்தார்.. டெல்லி மக்களைப்போல, குஜராத் மக்களும் அயோத்திக்கு சென்று ராமரை வழிபட இலவச தரிசன திட்டத்தைச் செயல்படுத்துவோம் என்று சொல்லி பாஜகவின் அஸ்திவாரத்திலேயே கை வைத்தார்.. பாஜகவின் இன்னொரு ஆணிதான் ஆம் ஆத்மி என்று காங்கிரஸ் பிரச்சாரம் செய்தாலும்கூட, பாஜகவை ஆம் ஆத்மி டேமேஜ் செய்யும் அளவுக்கு, காங்கிரஸால் ஆம் ஆத்மியை டேமேஜ் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

 செங்கல்

செங்கல்

இந்த தேர்தலில், தோல்வியை தழுவினாலும்கூட, பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுக்களையும், காங்கிரஸின் அதிருப்தி ஓட்டுக்களையும் ஆம் ஆத்மி அறுவடை செய்ய துவங்கிவிட்டது என்றே சொல்லலாம். டெல்லியில் காங்கிரஸ், பாஜக ஆகிய 2 கட்சிகளை ஆம் ஆத்மி வீழ்த்தி காட்டியுள்ளது.. பஞ்சாப்பிலும் முத்திரையை பதித்துவிட்டது.. காங்கிரஸிடம் இருந்து குஜராத்தை பாஜக கைப்பற்றிய நிலையில், அந்த குஜராத் கோட்டையில் ஒரு செங்கல்லை ஆம் ஆத்மி உருவினால்கூட, அது பாஜகவின் சறுக்கலாகவே கணிக்கப்பட்டு விடும்.. அதுமட்டுமல்ல, டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 250 வார்டுகளில் 134 வார்டுகளை ஆம் ஆத்மி கைப்பற்றியதுடன், 15 ஆண்டு கால பாஜகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஷாக் தந்துள்ளது..

அந்தஸ்து

அந்தஸ்து

தேசிய அரசியலில் தன்னுடைய தடத்தைப் பதிக்க தீவிரமான முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மிக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி என்றே சொல்லலாம்.. அதேபோல, இன்னொரு அங்கீகாரத்தையும் ஆம் ஆத்மி எதிர்நோக்கி வருகிறது.. பொதுவாக, ஒரு அரசியல் கட்சி, தேசிய அந்தஸ்தை பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் 4 மாநிலங்களில், மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை.. அதாவது, சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தது 2 இடங்களையும், 6 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்க வேண்டும். ஆம் ஆத்மியை பொறுத்தவரை, கடந்த 2012-ல்தான் துவங்கப்பட்டது.

ஓட்டைகள்

ஓட்டைகள்

இப்போதைக்கு டெல்லி, பஞ்சாப், கோவா என 3 மாநிலங்களில் மாநில அந்தஸ்தை பெற்றுவிட்டது. 4வது மாநிலமாக, குஜராத் தேர்தல் கை கொடுக்குமோ? 6 சதவீத வாக்குகள் கிடைத்துவிடுமோ? என்ற என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது.. தேசிய கட்சி என்ற அந்தஸ்தை ஆம் ஆத்மி பெறும் பட்சத்தில், 2024 தேர்தலில், தமிழ்நாடு உட்பட பெருவாரியான மாநிலங்களில் அக்கட்சியின் தாக்கங்கள் அதிகமாகும்.. எப்படி பார்த்தாலும், குஜராத் பாஜகவின் பலம்வாய்ந்த இரும்பு கோட்டையை, ஆம் ஆத்மி துளையிட ஆரம்பித்துவிட்டது..!!!

English summary
BIG developments of Aam Aadmi Party and Will AAP be recognized as a national party soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X