சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முன்ன மாதிரி வாழறதை விட முன்ஜாக்கிரதையாக வாழ்வது முக்கியம் - கமல் அட்வைஸ் யாருக்கு

முன்ன மாதிரி வாழறதை விட முன்ஜாக்கிரதையாக வாழ்வது முக்கியம் என்று கூறி இருக்கிறார் கமல். பிக் பாஸ் போட்டிக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கமலின் அட்வைஸுடன் இன்றைய புரமோ வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா காலமாக இருப்பதால் முன்ன மாதிரி வாழ்வதை விட முன் ஜாக்கிரதையாக வாழ்வது முக்கியம் என்று அட்வைஸ் செய்திருக்கிறார் பிக்பாஸ் கமல். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்க 2 நாட்களே உள்ள நிலையில் தினம் தினம் புரமோ வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் சேர்த்தே அட்வைஸ் செய்திருக்கிறார் கமல்ஹாசன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்றாண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. ஜூன் மத்தியில் தொடங்கி 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் முடிந்து விடும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நான்கு மாதங்கள் சூட்டிங் தடை பட்டதால் பிக்பாஸ் மட்டுமல்ல சீரியல், சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி கொடுத்ததை அடுத்து பிக்பாஸ் தனது வேலையை ஆரம்பித்து விட்டார்.

கொரோனா ஒட்டிக்குமே என்றெல்லாம் கவலையில்லை.. வீட்டிற்குள் 4 பேர் செய்த பகீர் காரியம்.. மிரண்ட போலீஸ்கொரோனா ஒட்டிக்குமே என்றெல்லாம் கவலையில்லை.. வீட்டிற்குள் 4 பேர் செய்த பகீர் காரியம்.. மிரண்ட போலீஸ்

பிக்பாஸ் அதிரடி

பிக்பாஸ் அதிரடி

கொரோனா காலம் என்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சொன்னபடி கேளு என்று ஆடிக்கொண்டே மாஸ்க் போடுவதன் அவசியம், தனிமனித இடைவெளி கடைபிடித்தல் பற்றியும், வீட்டில் மனைவிக்கு உதவி செய்வது பற்றியும் புரமோ வெளியிட்டார் பிக்பாஸ்.

இன்னும் இரண்டு நாட்கள்

இன்னும் இரண்டு நாட்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறது. கமல் இன்று வெளியிட்ட புரமோவில் முன்ன மாதிரி வாழறதை விட முன் ஜாக்கிரதையாக வாழறதுதான் முக்கியம் என்று சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கிறது பிக்பாஸ் தப்புன்னா தட்டிக்கேட்பேன் நல்லதுன்னா தட்டிக்கொடுப்பேன் என்றும் பஞ்ச் வைத்திருக்கிறார்.

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

இந்த ஆண்டு பிக்பாஸ் சீசனில் விருந்தினர்கள் மட்டுமல்ல டாஸ்க்களும் நிறைய விதிமுறைகளோடு இருக்கப் போகிறது காரணம் கொரோனாதான். ஒரே பெட்டில் இரண்டு பேர் படுக்க முடியாது மாஸ்க் போட்டுதான் இருப்பார்கள் இருப்பதால் அதிகம் பொறணி பேச முடியாது. அப்படியே பேசினாலும் அது பிக்பாஸ்க்கு மைக்கில் கேட்க வாய்ப்பு இல்லை.

தண்ணீர் டாஸ்க் இருக்காது

தண்ணீர் டாஸ்க் இருக்காது

நீச்சல் குளத்தில் குளிப்பது கட்டுப்படுத்தப்படும். அதே போல தண்ணீர் விளையாட்டு டாஸ்க்குகளும் அதிகம் இடம் பெறாது. பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் டாஸ்க் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

பிக்பாஸ் கமல் அட்வைஸ்

அரசு குறிப்பிட்டுள்ள கொரோனா விதிமுறைகளை கருத்தில் கொண்டு வார இறுதியில் கமல் பங்கேற்றும் நிகழ்ச்சியில் அதிக அளவில் நேரடி பார்வையாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த காலங்களைப் போல இந்த ஆண்டும் அதிக எண்டர்டெயின்மென்ட் இருக்கும் என்றாலும் முன்ன மாதிரி வாழறதை விட முன்ஜாக்கிரதையாக வாழ்வது முக்கியம் என்று போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் சேர்த்தே அட்வைஸ் செய்திருக்கிறார் கமல்ஹாசன்.

English summary
Big Boss Kamal advises that it is more important to live cautiously than to live like before because the corona is old. With just 2 days to go before the Big Boss show, the day-to-day release of Prmo is raising expectations. Kamal Haasan has advised not only the Big Boss contestants but also the audience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X