'பீகாரின் சமூகநீதி பார்வைக்கு காரணம் தமிழகம்..' சென்னையில் முழங்கிய தேஜஸ்வி யாதவ்
சென்னை: சமூகநீதி குறித்த எங்களின் பார்வைக்கு தமிழகம்தான் காரணம் என பீகார் மாநில எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை "உங்களில் ஒருவன்" நூல் வெளியாட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.
"உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

தேஜஸ்வி யாதவ்
இவ்விழாவில் பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பேசுகையில், ''தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தின் மீது மிகவும் ஈர்ப்புகொண்ட எனது தந்தை லாலு பிரசாத், எங்கள் பீகாரிலும் அதனை செயல்படுத்தினார். தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி போன்றோரால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமூகநீதி
பல வரலாற்று நிகழ்வுகளை முதல்வரின் சுயசரிதையிலிருந்து அறிந்துக் கொண்டேன். சமூகநீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே திராவிட மாடல். தலைவர்களின் சுயசரிதையை பதிவு செய்வது, வரலாற்றில் முக்கியமானது. இந்த புத்தகம் சமூகம் குறித்து பரவலான பார்வையை வெளிப்படுத்துகிறது. அரசியலில் இருப்பவர்களுக்கு மக்களை புரிந்துகொள்வது சவால்நிறைந்தது.

சுயசரிதை
பல வரலாற்று நிகழ்வுகளை முதல்வரின் சுயசரிதையிலிருந்து அறிந்துக் கொண்டேன். சமூகநீதியும், பொருளாதார நீதியும் இணைந்ததே திராவிட மாடல். தலைவர்களின் சுயசரிதையை பதிவு செய்வது, வரலாற்றில் முக்கியமானது. இந்த புத்தகம் சமூகம் குறித்து பரவலான பார்வையை வெளிப்படுத்துகிறது. அரசியலில் இருப்பவர்களுக்கு மக்களை புரிந்துகொள்வது சவால்நிறைந்தது.

புரிந்துகொள்ள வேண்டும்
சமூகத்தில் மாற்றங்களை கொண்டுவர, புத்திசாலித்தனம் மட்டும் போதாது, மக்களை புரிந்துகொள்ளவேண்டும். அந்த வகையில் ஸ்டாலின் இந்த சமூகத்தையும், மக்களின் எண்ண ஓட்டங்களையும் புரிந்துகொண்டுள்ள ஒரு தலைவர். இந்த புத்தகம் ஸ்டாலினின் பரந்து பட்ட பார்வையையும், அரசியலையையும் விவரிக்கிறது. இந்த புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டும்'' என்று தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications