நாதக மாஜி சிவராமனும் தந்தையும் மர்ம மரணம்! யாரையோ காப்பாற்ற கொல்லப்பட்டிருக்கலாம்.. அண்ணாமலை பகீர்
சென்னை: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனும், அவரது தந்தையும் அடுத்தடுத்து பலியானது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரபரப்பு புகாரை கிளப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை.
சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது என அவர் கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள கிங்ஸ்லி பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியான சிவராமன் போலி என்சிசி பயிற்சி முகாம் நடத்தி இருக்கிறார். அதில் 19 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில் அதில் ஒரு மாணவியை சிவராமன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தெரியவந்தது.
இதை அடுத்து சிவராமன் கைது செய்யப்பட்ட நிலையில், அதே பள்ளியில் மேலும் பல மாணவிகளை சிவராமன் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியது தெரியவந்தது. இதை அடுத்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவராமன் மற்றும் அவரது குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட 11 பேரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதை அடுத்து அந்த குழுவினர் பள்ளி மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் ஏற்கனவே சிவராமன் குடும்ப பிரச்சினை காரணமாக எலியை கொல்ல வைக்கப்படும் பசையை தின்று தற்கொலைக்கும் முயன்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீசார் கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக மீண்டும் அவர் தற்கொலைக்கு முயன்றார் என கூறுகின்றனர் காவல்துறையினர்,
இந்த நிலையில் கைது நடவடிக்கையின் போது சிவராமன், போலீசாரை கண்டு தப்பியோட முயன்றதாகவும் இதை அடுத்து அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் பரிந்துரைப்படி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவராமன் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிவராமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கு இடையே சிவராமனின் தந்தை என அசோக்குமார் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காவேரிப்பட்டினம் அருகே விபத்துக்குள்ளனர். மது போதையில் இருந்த அவர் தடுமாறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து அவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவராமன் மற்றும் அவரது தந்தை அசோக்குமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பரபரப்பு புகாரை கிளப்பியுள்ளார் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை. இதுதொடர்பாக அவரது பதிவில்,"கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான, நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன், காவல்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே, எலி மருந்து சாப்பிட்டு, இன்று காலை உயிரிழந்துள்ளதாகக் கூறுகின்றனர்.
மேலும், அவரது தந்தை அசோக் குமார் என்பவரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த இரண்டு மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய வேறு யாரேனும் முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது.
உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா அல்லது யாரையோ காப்பாற்றும் முயற்சியாக, தந்தை, மகன் இருவரின் மரணங்களும் நிகழ்ந்துள்ளனவா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான பதில்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என கூறியுள்ளார்.

-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!












Click it and Unblock the Notifications