சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாவர்க்கர் அனுபவித்த கொடுமை! அவர் குறித்து வருங்கால சந்ததி படிக்க வேண்டும்..! பாஜக அண்ணாமலை அதிரடி.!

Google Oneindia Tamil News

சென்னை : சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளை எந்த ஒரு மனிதனும் அனுபவிக்கக்கூடாது எனவும், வருங்கால சந்ததியினர் வீர் சாவர்க்கர் குறித்து படிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

வினாயக் தாமோதர் சாவர்க்கர், இந்தியாவில் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் பாகுரில் 1883-ஆம் ஆண்டு மே 28-ல் பிறந்தார்.

ஆங்கிலேயரால் 50 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு, 12 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். இந்துத்துவா மற்றும் வலது சாரி ஆதரவாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிற இவர் 1966-ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி இறந்தார்.

”கடின உழைப்பாளி சாவர்க்கர்” - பிறந்தநாளன்று ட்விட்டரில் புகழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி ”கடின உழைப்பாளி சாவர்க்கர்” - பிறந்தநாளன்று ட்விட்டரில் புகழ்ந்த பிரதமர் நரேந்திர மோடி

வீர சாவர்க்கர் பிறந்தநாள்

வீர சாவர்க்கர் பிறந்தநாள்

இந்நிலையில் இன்று வீர் சவார்க்கரின் 139வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பாஜக உள்ளிட்டம் பல்வேறு கட்சிகளின் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். ஒரு புறம் ஆங்கிலேயர்களுக்கு சாவார்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதினார் என்றும் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

இந்நிலையில் வீர் சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளை எந்த ஒரு மனிதனும் அனுபவிக்கக்கூடாது எனவும், வருங்கால சந்ததியினர் வீர் சாவர்க்கர் குறித்து படிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து சாவர்க்கர் இருந்த சிறைச் சாலையில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தினையும் அண்ணாமலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

சிறைக் கொடுமை

சிறைக் கொடுமை

அதில், "வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். சமீபத்தில் அந்தமானில் உள்ள செல்லுலார் சிறையில் அவர் தனிமையில் அடைக்கப்பட்டிருந்த அதே அறைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நம் தேசத்துக்காக சாவர்க்கர் அனுபவித்த கொடுமைகளை எந்த ஒரு மனிதனும் அனுபவிக்கக்கூடாது.

Recommended Video

    DMK-வின் Corruption பற்றி Annamalai பரபரப்பு தகவல் | #Politics | OneIndia Tamil
    சவார்க்கரின் வரலாறு

    சவார்க்கரின் வரலாறு

    தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினர் வீர் சாவர்க்கர் குறித்து அதிகமாக படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என அண்ணாமலை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனை பாஜகவினர் பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில் பலரும் அண்ணாமலையின் பதிவிலேயே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    English summary
    BJP tamil nadu president Annamalai has said that no human being should suffer the atrocities suffered by Savarkar and that future generations should read about Veer Savarkar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X