ஸ்டிக்கர் ஒட்டி எனக்கே விபூதி அடிக்க பார்த்தாங்க.. திமுகவை விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை
சென்னை: ‛ஸ்டிக்கர் ஒட்டி எனக்கே விபூதி அடிக்க பார்க்கிறாங்க'' என திமுகவை பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்பாக விமர்சனம் செய்துள்ளார்.
Recommended Video
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை தலைதூக்கியுள்ளது. இதனால் கோஷ்டி அரசியல் உருவாகி உள்ள நிலையில் பாஜக அதனை சரியாக பயன்படுத்தி வருகிறது.
மேடைக்கு மேடை அண்ணாமலை ஆளும் திமுக அரசின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். அதேபோல் திமுகவினரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மத்திய பாஜகவை அரசையும், அண்ணாமலையையும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அண்ணாமலை பேச்சு
இதனால் தமிழக அரசியல் களம் என்பது திமுக-பாஜக இடையேயான வார்த்தைபோராக மாறி வருகிறது. இந்நிலையில் தான் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் திமுகவை சேர்ந்த ஒருவர் எனக்கே விபூதி அடிக்க பார்த்தார் என கூறினார். இதுதொடர்பாக அண்ணாமலை பேசியதாவது:

விபூதி அடிக்க பார்க்கீறாங்க
திமுக அரசு என்பது ஸ்டிக்கர் அரசு. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் திமுகவை சேர்ந்த ஒருவர் எனக்கே ஸ்டிக்கர் ஒட்டினார். அங்கே போய் இங்கே போய் எனக்கே விபூதி அடிக்க பார்த்தார். அதாவது தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி செய்ததால் தான் அண்ணாமலை படித்ததாக ஒருவர் கூறுகிறார்.

அனைத்தும் பொய்
நான் படித்த கல்லூரி திமுக உருவாகுவதற்கு முன்பே 1940ல் தொடங்கிய கல்லூரி. 1952ல் பொறியியல் படிப்பு கொண்டு வந்த கல்லூரி. அதற்கும், திமுகவுக்கும் என்ன சம்பந்தம்?. ஐபிஎஸ் படித்ததற்கு கூட திமுக தான் காரணம் என கூறுகின்றனர். இது அனைத்தும் பொய். ஆனால் நான் அரசியல் வருவதற்கு திமுக தான் காரணம் கொஞ்சம் ஏமாந்தால் நாம் அனைவரும் உயிருடன் இருப்பதற்கே ஸ்டாலின் தான் காரணம் என கூறுவார்கள்.

நமக்கான காலம்
தமிழகத்தில் நமக்கான காலம் வந்துவிட்டது. தற்போது அரசியல் கட்சிகள் பணத்தை வைத்து விளையாடுகின்றன. ஆனால் பாஜக அப்படி இல்லை. இதனால் உங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். திமுக ஆட்சிக்கு வந்து 15 மாதம் ஆன நிலையில் சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில் மக்களிடம் அதிருப்தி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியை இந்தியா முழுவதும் பார்த்து வருகின்றனர். இது பலம் சேர்க்கும்'' என பேசினார்.

திமுக கூறியது என்ன?
முன்னதாக திமுகவின் சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து இருந்தார். அதற்கு தான் தற்பாது அண்ணாமலை பதிலளித்துள்ளார். கார்த்திகேய சிவசேனாபதி வெளியிட்ட பதிவில், ‛‛கலைஞர் கொடுத்த பிற்படுத்தப்பட்டோர் என்ற சலுகையை பயன்படுத்தி தான் நீங்களும், நானும் இன்னும் பலரும் இன்றும் உயர் அதிகாரிகளாகவும், வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், நீதியரசர்களாகவும் உயர்ந்த அந்தஸ்தை பெற்றிருக்கிறோம். அண்ணாமலை அவர்களே உங்கள் டிசியில் கொங்கு வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த பிசி வகுப்பை சேர்ந்தவர் என இருந்ததா இல்லையா. அதை வைத்து தான் கோவையில் பொறியியல் படிப்பில் சேர்ந்தீர்களா இல்லை. அதேபோல் லக்னோ ஐஐஎம்-ல் பிற்படுத்தப்படட் வகுப்பை சேர்ந்தவர் என்பதை குறிப்பீட்டீர்களா இல்லையா. கலைஞர் கொடுத்த பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு என்ற சலுகையை பயன்படுத்தவில்லை என்றால் அதற்கான ஆதாரத்தை கொடுங்க. இல்லையென்றால் ட்விட்டர் பக்கத்தில் எனது முன்னேற்றத்துக் கலைஞர் மற்றும் திமுகவின் பங்கு இருக்கிறது'' என கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications